உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் உதயநிதிக்கு புரோமோஷன்

சட்டசபையில் உதயநிதிக்கு புரோமோஷன்

சென்னை: துணை முதல்வர் உதயநிதிக்கு சட்டசபையில் முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி பின்னர் அமைச்சரானார். பின்னர் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சட்டசபையில் உதயநிதிக்கு 3வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அமைச்சரான பிறகு, முதல் வரிசையில் இருக்கை தரப்பட்டது. இந் நிலையில் தற்போது துணை முதல்வராக அவர் இருப்பதால், சட்டசபையில் முதல் வரிசையில், 3வது இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக சட்டசபையில் இன்று உதயநிதி அமர்ந்திருந்தார். துணை முதல்வரான பின்னர், நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

manivannan
டிச 10, 2024 06:55

மக்கள் நம்மளை தப்பாக பேசிவிடக் கூடாது என்பதற்காக நீர் வளர்த்து நீர்வளத்துறை அமைச்சரை இரண்டாவது இடத்தில் இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நீர்வளத்துறை அமைச்சரை கேட்டுப் பாருங்கள் அவர்கள் அவரை நடத்தும் விதமே வேறு...


Nandakumar Naidu.
டிச 09, 2024 19:39

அடுத்த கூட்டத்தொடரின் போது மடி மேல் தான் இருக்கை .


Narasimhan
டிச 09, 2024 19:20

AI தொழில் நுட்பம் மூலம் உங்க அப்பாரையும் உட்கார வைக்கலாமே.


sankaranarayanan
டிச 09, 2024 18:56

சட்டசபையில் முதல் வரிசையில், 3வது இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது சரி அல்லவே முதல்வர் பிறகு துணை முதல்வர் என்றுதானே அமர வேண்டும் இது என்ன நியதியா இவர்களுக்கு, - ஓகோ - துறை அய்யாவுக்கு கோபம் வந்துட போறதேன்னு தெரிந்துதான் இப்படியா ஏற்பாடு எத்தனி நாட்களுக்கு இது என்றே பார்ப்போம் சரியான சமயம் வரும்போது டபக்குன்னு அவரு புள்ளையாண்டான் இரண்டாமிடத்துக்கு தாவிடுவாரு பிறகு துரைக்கு குறை ஒன்றுமே இருக்காது மலை மூர்த்தி கண்ணா என்று எம்.எஸ் பாடலை பாட வேண்டுயதுதான் மிச்சம்


sankar
டிச 09, 2024 17:43

பெரிய இடது விஷயம் - ஒன்றும் சொல்ல முடியாது - அடுத்த இடத்தில மாப்பிளைசார் கூட உட்காரலாம் - யார் கேட்பது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை