| ADDED : ஜன 01, 2024 06:34 AM
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய இணை அமைச்சர்கள் மகேந்திரபாய் முன்ச்பாரா, எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோர் உறவினர்களுடன் தரிசனம் செய்தனர்.மத்திய பெண்கள், குழந்தைகள் நல இணை அமைச்சர் முன்ச்பாரா மகேந்திரபாய், சுகாதாரம், உணவு பாதுகாப்பு இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோர் தனித்தனியாக நேற்று இக்கோயிலுக்கு வந்தனர். சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர்கள், உறவினர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் மத்திய அமைச்சர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர்களை பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.