உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் மீது மின்சார தீவிரவாதம் கட்டவிழ்ப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

மக்கள் மீது மின்சார தீவிரவாதம் கட்டவிழ்ப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது'' என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூரில் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திறமையற்ற அரசு

இதில், அன்புமணி பேசியதாவது: கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது. 33.7% அளவு உயர்ந்து உள்ளது. இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள அராஜகம். மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது. மின்கட்டணம் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால், இன்னும் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். இது மிகபெரிய மோசடி. தமிழகத்தில், லஞ்சம், ஊழல் நிர்வாகத் திறமையற்ற அரசு உள்ளது.

போராட அழைப்பு

தமிழகத்தில் மின் உற்பத்தியை இவர்கள் நிறுத்திவிட்டனர். தனியார் நிறுவனத்திடம் அதிக கட்டணம் கொடுத்து மின்சாரம் வாங்குகின்றனர். இதன் மூலம் அதிக கமிஷன் பெறுகின்றனர். அரசு சார்பில் மின் திட்டங்கள் நிலுவையில் உள்ளது. 17,300 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டும். கமிஷன் கிடைப்பதால், மின்உற்பத்தி செய்யவில்லை. மின்கட்டண உயர்வால் சிறுகுறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் இனி பொறுக்கக்கூடாது. சாலைகளுக்கு வந்து போராடினால், தான் கட்டணத்தை திரும்ப பெறுவார்கள். நிர்வாக திறமையற்ற காரணத்தினால், அவர்களின் ஊழலால் பொது மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படணுமா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., தோற்று இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

T.sthivinayagam
ஜூலை 19, 2024 21:16

பாஜகாவின் அஞ்சலை பற்றி அன்புமனி பேசுவாரா


Narayanan Muthu
ஜூலை 19, 2024 21:15

udhay மின் திட்டம் கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட அண்ணாதிமுக அரசும்தான் இதன் பின்னணி என மங்காவிற்கு தெரியாமல் போனதன் காரணம் பணப்பெட்டி என்றால் அதை தூக்கி பிடிக்கும் சங்கிகளுக்கு தெரியாத என்ன


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 19:15

சொல்லாததையும் செய்கிறோம் என்று முதல்வர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. மின் கட்டண உயர்வு தேர்தல் அறிக்கையில் கூட இல்லாத வாக்குறுதி. சபாஷ் விடியல்.


mindum vasantham
ஜூலை 19, 2024 18:22

திமுக மட்டும் விலை ஏற்றி கொண்டே இருக்கும் மற்றவர்கள் எற்ற கூடாது


முருகன்
ஜூலை 19, 2024 17:36

பக்கத்து மாநிலங்களில் மின்கட்டணம் இதை விட அதிகமாக உள்ளது உங்களுக்கு தெரியுமா சந்தர்ப்பம் கிடைத்தால் அனைத்திலும் அரசியல் செய்வது ஏன்


Bellie Nanja Gowder
ஜூலை 19, 2024 19:00

ஏன் உங்கள் ஸ்டாலின் பேனர் பிடித்து நின்றாரே "ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா" என்று. அப்போது அவர் அரசியல் செய்யாமல் அவியலா செய்து கொண்டு இருந்தார்??


மாடல்
ஜூலை 19, 2024 19:13

முருகா பக்கத்து மாநிலத்துல கேஸ் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருக்கு. இங்கே ஏன் இல்ல? 200 ரூவாக்கு ரொம்ப கூவுர


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 19:14

அங்கெல்லாம் மாதாமாதம் மீட்டர் ரீடிங் எடுப்பதால் கட்டும் தொகை குறைவு. இங்கு வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மக்கள்.


hariharan
ஜூலை 19, 2024 14:26

திராவிட மாடலில் இது மின்கட்டண உயர்வு என்று சொல்லக் கூடாது, அவ்வாறு சொன்னால் குண்டர் சட்டம் பாயும். இது வெறும் மின்கட்டணத் திருத்தம்.


ram
ஜூலை 19, 2024 13:51

தலைவர் ஸ்டாலின் ...போன ஆட்சியிலே ஒரு முறை மின்கட்டணம் ஏத்துனதுக்கு கருப்பு சட்டை அணிந்து .. கரண்ட் அடிச்சு செத்துட்டதுபோலே கூவினாரு சகாக்கலோட.. இப்போ இவங்க ஆட்சியிலே மூன்று நான்கு முறை ஏத்து ஏத்துன்னு ஏத்திக்கிட்டே இருக்காரு நம்ம தலீவரு... ஓ.. இதுக்கு பேருதான் தக்காளி சட்டினி கதையோ... ஓட்டுப்போட்ட தமிழ்மக்களே.. இது இனிப்பான செய்திதானே...


Palanisamy T
ஜூலை 19, 2024 16:19

தலைவர் ஸ்டாலின் என்று தேவையின்றி போற்றி விட்டீர்கள் அப்புறம் ஏன் தேவை யில்லாமல் புலம்பவேண்டும். வோட்டுப் போட்ட மக்கள் புலம்பவில்லையே அவர்களுக்கு அது தேவையில்லை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி