உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 4 வரை பணம் எடுத்து செல்ல கட்டுப்பாடு

ஜூன் 4 வரை பணம் எடுத்து செல்ல கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4 வரை, தமிழகத்தில் பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என, தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதனால், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்வோர், பறக்கும் படையின் கிடுக்கிப்பிடியில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான மார்ச் 16 முதல், தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தனிநபர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடும் பாதிப்பு

பணப் பட்டுவாடாவை தடுக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா மூன்று பறக்கும் படைகளும், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும், ஒரு வீடியோ குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக, வியாபாரிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர், நகை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்; சிறு தொழில்கள் முடங்கிஉள்ளன.தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதன்பின் கெடுபிடி இருக்காது என மக்கள் எதிர்பார்த்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டுஉள்ளன. இக்குழுவினர், வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையில் மெத்தனமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும். ஓட்டுப்பதிவு முடிந்த பின், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா ஒன்றாக குறைக்கப்படும். தனி நபர், 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்ல தடை தொடரும்.ஓட்டுப்பதிவு 100 சதவீதம் என்பதே இலக்கு. ஓட்டுப்பதிவு குறைவாக உள்ள நகரங்களில், ஓட்டுப்பதிவை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சாமியானா பந்தல்

குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி இல்லாத ஓட்டுச்சாவடிகளில், தற்காலிகமாக அவற்றை ஏற்படுத்தவும், நிழலுக்கு சாமியானா பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த துணை ராணுவ வீரர், நாமக்கல்லில் ஒரு தேர்தல் பணி அலுவலர், சாலை விபத்தில் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு, தலா 15 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும். இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

வாக்காளர் பட்டியல்

ஓட்டு போட வரும் வாக்காளர்களின் பெயரை, வாக்காளர் பட்டியலில் எளிதாகக் கண்டறிவதற்காக, அகர வரிசைப்படி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 33.46 சதவீதம் வாக்காளர்களுக்கு, அதாவது 2.08 கோடி வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்'கள் வழங்கப்பட்டுள்ளன; மற்றவர்களுக்கு வரும் 13ம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பூத் சிலிப் கிடைத்த வாக்காளர்கள், அதை எடுத்துச் சென்றால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் எளிதாக சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர், பட்டியலில் எந்த வரிசை எண்ணில் உள்ளது என்பதை கண்டறிவர்.பூத் சிலிப் கிடைக்காதவர்கள், தங்கள் பெயர் எந்த வரிசையில் உள்ளது என்பதை அறிய, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அலுவலர்கள் இருப்பர். அவர்களுக்கு மட்டும் அகர வரிசைப்படி பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஏப் 09, 2024 21:51

நாட்டை ஆளும் அரசன் முட்டாளாக இருந்தால் அதிகாரிகள் மடையர்களாகத் தானே இருப்பார்கள்!


J.V. Iyer
ஏப் 09, 2024 18:51

பொது மக்கள், பாஜக கூட்டணிகளுக்கு மட்டும் இதும் பொருந்துமா


ديفيد رافائيل
ஏப் 09, 2024 17:26

ஆளுங்கட்சிக்கு மட்டும் விதிவிலக்கு


Mani . V
ஏப் 09, 2024 16:52

ஜூன் வரையா? ஜூன் வரையா? ஒரு பட்டனை தட்டினால் தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் முடிவைத் தெரிந்து கொள்ளலாம் இரண்டு மாத அவகாசம் என்பது என்னென்ன வேலை செய்யவோ?


Saai Sundharamurthy AVK
ஏப் 09, 2024 15:39

மிக மிக நல்ல முடிவு ???


Rathinakumar KN
ஏப் 09, 2024 12:48

இது அறிவிப்பு ரொம்ப அநியாயம் மாநிலத்தில் தேர்தல் முடிந்து விட்டால் அரசியல்வாதி யாருக்கும் பணம் தரப்போவதில்லை ஒரே நேரத்தில் மாநிலத்தில் தேர்தல் முடிந்து விடுகிறது தேர்தல் முடிந்த மாநில எல்லைகளை சீல் வைத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது தானே


கனோஜ் ஆங்ரே
ஏப் 09, 2024 12:30

ஏய்யா வாக்குப் பதிவு முடிஞ்சதும், தமிழக மாநில எல்லைகளில் கடும் கட்டுபாடு விதிங்க தப்பில்ல குண்டு சட்டில குதிரை ஓட்டுறவன்கிட்ட தடைன்னா என்ன அர்த்தம்


N DHANDAPANI
ஏப் 09, 2024 11:42

வியாபாரிகளுக்கு, வணக்கம் பக்கத்து இலைக்கு பாயசம் வேண்டாம் உங்களால் மிதிபட்டு கீழே கிடக்கும் எங்களுக்கு இந்த சலுகை வேண்டாம் சட்டப்படியே நடக்கட்டும்


R.PERUMALRAJA
ஏப் 09, 2024 11:28

அவன் அவன் பல ஆயிரம் கோடிகளை காய்கறி லாரி , சமையல் என்னை லாரி , மணல் லாரி , பால் வண்டி ஆகிய வாகனங்களுக்குல் அடைத்து மிக கட்சிதமாக கண்ணில் மணல் தூவி பகலில் கொண்டு செல்கிறார்கள் , போலீஸ் நிர்வாகமும் இதற்க்கு உடந்தை தேர்தல் கமிஷன் இதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை , கோடி , கோடி என்று எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் நன்றாக வைத்து செய்கிறார்கள் நகை அடகு கடைகள் தான் பணத்தை கொண்டு செல்வத்திலும் , பட்டுவாடா செய்வதிலும் கண கச்சிதமாக செயல்படுகின்றன என்பது புதிய தகவல்


Veeraputhiran Balasubramoniam
ஏப் 09, 2024 11:07

மக்களையும் வர்த்தகர்களையும் கொடுமைக்கு உளளாகும் தேர்தல் ஆணயம், நீதி மன்றம், மற்றும் அரசு லஞ்சம் ஊழல் , தேர்தல் பணம் பட்டுவாடா இது எதயுமே தடுக்கும் திறன் அற்று மக்களை அவர்களின் சகஜ வாழ்கையைய்யும் நேர்மயான வாழ்க்கையையய்யுமே சீர் குலைக்கிறன திருமணம் நல்லது கெட்டது என அனைத்தயுமே சீர்குலைக்கும் விதமாக் செயல் பட்டு கொண்டு இருக்கிறது நேர்மையானவர்கள் திருமணம் போன்ற அவர்களில் குழந்தைகளின் எதிகாலம் சார்ந்த அவர்களின் பணம் பொருள்களுடன் பயணிக்க ஆவணம் எது எது எடுத்து செல்லவேண்டும் என்றால் எது எது என் கூட தெளிவாக்க கூற மாட்டேன் என்று தெளிவாக் உள்ளது இவர்களின் செயல் பாடு


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி