உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்,,

செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்,,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள், பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், சங்க இலக்கியம் குறித்த தகவல் களை அறியும் வகையில், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானுாறு, புறநானுாறு உள்ளிட்ட எட்டுத்தொகை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை.குறிஞ்சிப்பாட்டு உள்ளிட்ட பத்துப்பாட்டு நுால்கள்; திருக்குறள், பழமொழி, நாலடியார் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நுால்கள் குறித்த தகவல்களை உரைகளாக பதியும் பணி நடைபெற்று வருகிறது.தற்போது திருக்குறள், குறுந்தொகை, மலைபடுகடாம், இரட்டை காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆகியவை குறித்த அரிய செய்திகள் உரைகளாக பதியப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுஉள்ளன.இவற்றை பிரபல பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கி உள்ளனர். இதுகுறித்த வீடியோக்களை செம்மொழி நிறுவனத்தின், www.cict.inஎன்ற இணையதளத்தில் உள்ள காணொலி பகுதியில் பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை