உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்களுடன் இணைந்து வெற்றிக்கழகம்...போராட்டம்! செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் விஜய்

மீனவர்களுடன் இணைந்து வெற்றிக்கழகம்...போராட்டம்! செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தும்' என, நடிகர் விஜய் அறிவித்துள்ளார். மற்ற கட்சிகள் மீனவர்களுக்கு ஆதரவாக அறிக்கை மட்டும் கொடுத்து வரும் நிலையில், விஜயின் போராட்ட அறிவிப்பு, மீனவர்கள் மத்தியில் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகமாகவும், உள் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலும் வாழும் மீனவர்களை, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விளம்பர வெளிச்சம் இல்லாமல் சில மாதங்களாக சந்தித்து பேசி வந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q9617d40&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்திப்பு

'எல்லை தாண்டி மீன் பிடித்த காரணத்துக்காக, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவிப்பதையும், ஊடகம் வாயிலாக விஜய் அறிந்து உள்ளார். 'எனினும், அதன் முழுமையான பின்னணி என்ன, மீனவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்னைகள் என்ன என்பதை கேட்டறிந்து வருமாறு எங்களை அனுப்பி இருக்கிறார்' என்று அறிமுகம் செய்து கொண்டு, மீனவர் சங்க பிரதிநிதிகளையும், மீனவ குடும்பங்களையும் அவர்கள் சந்தித்து பேசினர். பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக, மத்திய அரசுகள் இதுவரை என்ன முயற்சிகள் எடுத்தன; அவை ஏன் பலன் அளிக்கவில்லை? எப்படி தீர்வு காணலாம் என நீங்கள் யோசனை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டு, அனைத்து தகவல்களையும் சேகரித்தனர். விஜயிடம் அறிக்கை அளித்தனர். அதை படித்த பின், மீனவ பிரதிநிதிகள் சிலரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'த.வெ.க., தொடர்ந்து உங்கள் பிரச்னைகளை பொதுவெளியில் வலியுறுத்தும். மற்றவர்களை போல அறிக்கை வெளியிட்டு அல்லது கடிதம் எழுதி விட்டு கடந்து போக மாட்டேன். வார்த்தை ஜாலத்தால் மக்களை மூளைச்சலவை செய்ய மாட்டேன். செயலில் காட்டுவேன்' என்று விஜய் கூறியுள்ளார்.

தீர்மானம்

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று விஜய் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்: கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையேயான குறுகிய கடற்பரப்பில், மீன்பிடித்தலில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை, ஐ.நா.,வின் கடல்சார் சட்டப்பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒப்பந்தங்கள்

தீவு கூட்டங்கள் உடைய கடற்பகுதியை கொண்ட நாடுகள், தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையை காத்துக் கொள்ள ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும். மீனவர்கள் கடல் எல்லைகளை தாண்டி மீன்பிடித்தலை மனிதாபிமான சிக்கலாகவே பார்க்க வேண்டுமே தவிர, அவர்களை கைது செய்யவோ, சிறைபிடிக்கவோ கூடாது என்று ஐ.நா.,வின் பிரகடனம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால், இலங்கை அரசு அதை பின்பற்றவில்லை; இந்திய அரசு வலியுறுத்தவில்லை. தமிழக அரசும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் இந்த சர்வதேச சட்டத்தை இலங்கை அரசு மதித்து நடக்க வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும்.

மகிழ்ச்சி

இவ்வாறு மீனவர்கள் பிரச்னை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேறு விஷயங்கள் குறித்து மேலும், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீனவர் பிரச்னைக்கான போராட்ட தேதி எதையும் நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கவில்லை. பல தரப்புடனும் ஆலோசித்து, யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில், போராட்டம் நடத்தப்படும் என்று ஒரு நிர்வாகி தெரிவித்தார். போராட்டத்தில் விஜய் பங்கேற்பாரா என கேட்ட போது, 'வீரர்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பவர் அல்ல எங்கள் தளபதி; களமிறங்கி வாள் சுழற்றுவார், காத்திருந்து பாருங்கள்' என்றார் அவர். விஜய் அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் தமிழக மீனவர்களின் பிரச்னையை தெரிந்து கொள்ளவும், மத்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், விஜய் போராட்டம் உதவும் என, மீனவ பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.மற்ற தீர்மானங்கள் என்னென்ன? த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்களில் சில: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டம் ஜனநாயக விரோதமானது. மத்திய அரசு அதை கைவிட வேண்டும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும் மத்திய அரசு மீது பொறுப்பை தட்டிக் கழிக்காமல், ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை தமிழக அரசே நடத்த வேண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அதன் வாயிலாக, 'நீட்' தேர்வை மாநில அரசே நீக்கலாம். இதில், பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க., அரசை கண்டிக்கிறோம் கோவையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைவாக துவக்க வேண்டும் தென் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வேண்டும் இலங்கை விவகாரத்தில், தமிழக அரசை கலந்து ஆலோசித்து வெளியுறவு கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கை துாதராக தமிழரை நியமிக்க வேண்டும். இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு எக்காலத்திலும் நிறைவேறாது மின் கட்டணம், பால், சொத்து வரி உயர்வு என மக்களின் பொருளாதார நிலையை கேள்விக் குறியாக்கி உள்ள, தி.மு.க., அரசுக்கு கண்டனம் கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும் மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் கால நிர்ணயம் செய்து மதுக்கடைகளை மூட வேண்டும் குலசேகரன்பட்டினத்தில், இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. 'சீமானை கண்டுக்காதீங்க' த.வெ.க., செயற்குழுவில் விஜய் பேசியது குறித்து, அவரது கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த கட்டமாக, பொதுக்குழு கூட்டம் நடத்த தயாராக வேண்டும். புத்தாண்டில், சுற்றுப் பயணம் செல்வேன். கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போன்றவற்றை, வீடு, வீடாக சென்று, பொதுமக்களிடம் விளக்க வேண்டும். நமக்கு தேசிய அளவில் பா.ஜ.,, மாநில அளவில் தி.மு.க., பொது எதிரிகள் என்பதை, மாநாட்டில் விளக்கி விட்டோம். தீர்மானங்களிலும் நாம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துள்ளோம். எனவே, மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக் காட்டுவோம். ரஜினி வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ரசிகர்களையும், நாம் அரவணைக்க வேண்டும். சீமானை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அவரை விமர்சிக்க வேண்டாம்.இவ்வாறு விஜய் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Indian
நவ 04, 2024 18:13

சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மீன் விலை மிக அதிகமாக உள்ளது ....அதையும் விஜய் கொஞ்சம் கவனியுங்க ..


Madras Madra
நவ 04, 2024 17:32

இவர் சார்ந்த திரைத்துறையில் இருந்த எல்லா பிரச்சினைகளையும் கடுமையாய் போராடி தீர்த்து வைத்து விட்டு தான் வந்திருக்கிறார் அதனால் கண்டிப்பாக இந்த பிரச்சினையை சீக்கிரமே முடித்து வைத்து விடுவார்


Madras Madra
நவ 04, 2024 16:51

விஜய் எதற்கு கட்சி ஆரம்பித்து உள்ளார் என்று மாரி தாஸ் வீடியோ போட்டிருக்கிறார் பாருங்கள் உண்மை புரியும்


M Ramachandran
நவ 04, 2024 14:16

அண்ணனெ இப்போ மீனவர்களுக்கு அடுத்து விவாசியிகளுக்கா எப்போ மூக்கால் ஒப்பாரி வச்சு அலுவ போரீங்க. அப்புறம் போக்கு வரத்து கழகங்கள் சினிமா கலைஞ்சர்கள் அப்புறம் அண்ணனெ நெய்வேலி இருக்கு இன்னும் நெறையா அதுக்குள்ள தேர்தல் வந்துரும்மே அண்ணனெ


Haja Kuthubdeen
நவ 04, 2024 12:43

விஜய் கட்சி தொடங்கி மாநாடு முடித்து சிலவாரங்கள்தான் ஆவுது... அதற்குள் அவரை திட்டி தீர்க்கிறான்னா பயம்....


krishna
நவ 04, 2024 20:27

DESA VIRODHA MIRUGA MOORGANUKKU VIJAY ENNA BJP THAVIRA ELLORAYUM PIDIKKUM.BJP ENDRAAL DHEIVIGAM DESA PATTRU.SO MOORGANUKKU IDHU IRANDUM ALARJI.


Sivagiri
நவ 04, 2024 12:43

இலங்கை ஏன் கைது செய்து லட்சக்கணக்கில் அபராதம் விதித்து படகுகளை பறிமுதல் செய்கிறார்கள் - என்ற உண்மையான காரணங்களை தமிழ்நாட்டில், இந்தியாவில் வெளிவருவதில்லை - இலங்கையும் தெளிவாக சொல்வதில் - மீனவர்கள் என்ற போர்வையில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கு . . . திராவிஷ அரசியலுக்காக / கன்வெர்ட்டிங் க்ரூப் சர்வதேச சதிகளுக்காக, அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறது ? . . .


hari
நவ 04, 2024 11:47

பாவம் வைகுண்டம் புலம்பல் ரொம்ப சாஸ்திய இருக்கே, ஓகே ஸ்டார்ட் மியூசிக் ...திமுக ஆப்பு ஆரம்பம்


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 12:44

விஜய் யின் கட்சி திமுக வின் B டீம் னு சொல்லிக்கிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா என் மீது தனிமனித தாக்குதல் எழுதறீங்க எழுதினதால் உங்களுக்கு என்ன கிடைத்தது??


ஆரூர் ரங்
நவ 04, 2024 11:27

மனைவி இலங்கைகாரர். இவரது அறிக்கையை அவரே ரசித்திருக்க வாய்ப்பில்லை . எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் பாதிக்கப்படுவது இலங்கையின் தமிழ் மீனவர்கள்தான். நம்மைவிட ஏழைகள். விஜய் கட்சி அவர்கள் வயிற்றில் அடிக்கும் வேலையை செல்கிறார்கள்.


Palanisamy T
நவ 04, 2024 10:06

ஏன் மீனவர்களோடு இணைந்து போராட்டம் நடத்தவேண்டும். இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் பட்ட கச்ச தீவை மீட்பதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துங்கள் போராடுங்கள். தீவை ஏன் அவர்கள் இலங்கைக்கு கொடுக்க வேண்டும். இதிலேதோவொரு மறைக்கப் பட்ட வெளியில் சொல்லமுடியாத உண்மை யுள்ளது.


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 13:13

கச்சத் தீவு பற்றி நெட்டில் பாருங்கள். 300 மீட்டர் அகலமும் ஒன்றரை கிலோமீட்டர் நீளமும் கொண்ட தீவு தான். இங்கே குடிநீர்நிலை இல்லை. மின்சாரம் இல்லை. விளைநிலம் இல்லை. ஒரு சர்ச் இருக்கு போல. அவ்வளவு தான். வேறு மர்மமோ, புதையலோ, வெளியில் சொல்ல முடியாத உண்மையோ கிடையாது.


Palanisamy T
நவ 04, 2024 09:51

ஏன் போராட்டம் நடத்த வேண்டும். முதல்வர் போன்று அடிக்கடி கடிதம் எழுதியனுப்பினால் போதும். பிரச்சனை தீர்ந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை