உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீர் தேர்தலில் ஜனநாயகத்திற்கு வெற்றி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

காஷ்மீர் தேர்தலில் ஜனநாயகத்திற்கு வெற்றி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி

காங்., கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். இது இண்டியா கூட்டணிக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. மத்திய பா.ஜ., அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும். காஷ்மீரின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கும் தருணம் இது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Ramesh Sargam
அக் 10, 2024 12:06

நாலு அல்லக்கைகளை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் இவர் ஜனநாயகத்தை பற்றி பேசுவதே தவறு.


Edi Shivaji
அக் 09, 2024 22:05

முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜாகா படுதோல்வி அடைந்து உள்ளது. இது ஜனநாயகத்தின் வெற்றி அல்ல. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தூண்டி விட்ட மத வெறியின் வெற்றியே. ஹரியானாவில் ஜனநாயக வெற்றி பற்றி ஏன் பேசவில்லையோ?


Nallavanaga Viruppam
அக் 09, 2024 14:27

அவர்கள் உங்களுக்கு வோட்டு போடுவது தங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பால் இல்லை, பாரதீய ஜனதா மேல் கொண்ட வெறுப்பால். தீவிர மதவாதிகள் அவர்கள், நாமெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.


Sankare Eswar
அக் 09, 2024 14:00

மெரினாவில் 5 பேர் உயிரை குடித்த இதை நிர்வாக திறனற்ற தத்தி சொல்லுது


Sankare Eswar
அக் 09, 2024 13:56

பத்திரம் ...


RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 13:03

புலிகேசி மன்னரிடம் யாரும் ஹரியானா தேர்தல் முடிவுகள் பத்தி சொல்லலையா ????


Muthu Kumaran
அக் 10, 2024 06:30

அப்படியா தேர்தல் நடந்ததா என்று கேட்பார், பரவாஇல்லையா


M Ramachandran
அக் 09, 2024 12:06

அப்போ தமிழக்தில் எனக்கோர் ஒரு தீவிர வாத்திய செத்தொழிந்ததற்கு இஙகு போஸ்டெர் ஒட்டி மகிழும் கும்பலுக்கு ஏன்னா தான் நீஙகள் பிஸ்கெட் போட்டாலும் அது வேறு எஙகோ சென்று ....


Rasheel
அக் 09, 2024 11:57

ஹரியானாவில் எதிர் கட்சி தலைவரின் பிரச்சாரத்திற்கு கிடைத்த ஆப்பு.


R.MURALIKRISHNAN
அக் 09, 2024 11:55

இண்டியாக்குள்ளாற நடக்கறதே தெரியாத முதல்வர்.ஹரியானா இந்தியக்குல்லறத்தான் இருக்கு அப்பு...


R.MURALIKRISHNAN
அக் 09, 2024 11:50

ஜோக்கர் முதல்வர்.திருட்டு திராவிடம் இன்னும் ஓராண்டில் முடிந்து தமிழ்நாட்டிற்கு விடியல் பிறக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை