ஈரோட்டில் வரும் 18ல் விஜய் பிரசாரம் உறுதி : தடையில்லை என்கிறார் செங்கோட்டையன்
ஈரோடு; ''ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜய் பிரசார கூட்டம், வரும் 18ம் தேதி திட்டமிட்டபடி நடக்கும்,'' என த.வெ.க., உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் துவங்கி உள்ளார். காஞ்சிபுரம், புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், வரும் 18ம் தேதி, ஈரோட்டில் பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cceq9tpa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விஜயமங்கலம் டோல்கேட் அருகே, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி அளிக்குமாறு காவல்துறையிடம் த.வெ.க.,வினர் கேட்டனர். ஆனால், அதற்கு கோவில் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால், விஜய் பிரசாரம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பார்வையிட்டார். பின், அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 18ம் தேதி காலை 11:௦௦ மணி முதல், 1:00 மணிவரை நடைபெறும் பிரசார கூட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்று பேசுகிறார். இந்த இடத்தில், கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டபடி பிரசார கூட்டம் இங்கு நடக்கும். இங்கு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினரிடம் மட்டுமே, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் கடிதம் கொடுத்துள்ளனர். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் எனக்கு எப்படி செல்வாக்கு இருந்ததோ, அதே போலத்தான் த.வெ.க.,விலும் எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.