உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாமல்லபுரம்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அக்கட்சித் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் இன்று (அக் 27) ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் மருத்துவ செலவு,கல்வி செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்து இருக்கிறார்.த.வெ.க., கட்சித் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் பிரசாரம் செய்தார். கடந்த செப்., 27ம் தேதி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். கரூரில் நடந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை, விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jnlav74t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்காக அவர் முயன்றதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இச்சூழலில், இறந்த வர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவெடுத்து, அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் இன்று (அக் 27) கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது உயிர் இழந்தோர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவு, கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

AMLA ASOKAN
அக் 28, 2025 09:53

இது ஒரு புதிய அருமையான கலாச்சாரம். செத்தவன் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க இனி போக தேவையே இல்லை.


Mr Krish Tamilnadu
அக் 27, 2025 20:29

ஜாதகப்படி உங்கள் கர்மவினை கழிய வேண்டும். கழித்தால் மட்டுமே உங்களுக்கு அந்த கிரகத்தின் நன்மைகள் நடக்கும் என்பார்கள். அது தவெக தலைவரின் விசயத்தில் உண்மை. கர்மவினை கழித்து உள்ளது. சரியாக 30 நாள், மன உளைச்சல், வெளியில் தலை காட்ட முடியவில்லை. என்ன, என்னமோ செய்தார்கள் சரியாக 27ம்தேதி காத்து இருந்து இருக்கிறது, இந்த சந்திப்புக்கு. அதிலும் 33 குடும்பங்கள் மட்டும். ஏதோ ஒரு ஜாதக கணக்கு வேலை செய்து கொண்டு இருக்கிறது. சூரசம்ஹார நாளில் முருகனையும், வேலையும் தவெக தலைவர் பிடித்தால் அவர் வெற்றி வாகை சூடுவார். தவெக தலைவர் ஏதோ ஒரு விதத்தில் அரசியல் களத்தில் இருக்க வேண்டும். அவரின் கருத்தின் ஆழம், அந்த பிரச்சினைக்கு விடியலை தருகிறது. அவரின் கருத்துக்கள் பிற தலைவர்களால் வழிமொழிய படுகிறது. நடுநிலை மக்கள் விரும்புவது பிரச்சினையை மக்களிடம் பேச வைப்பதை தான். இந்த சந்திப்பு என்பது தனது உணர்வு பூர்வமான விசயங்கள் கேலியாக்க பட கூடாது என்ற ஒரே எண்ணம். பர்சனல் என்பது அவர் அவர் மனதின் படி பர்சனல். ஷை அண்டு ஸாட் எமெஷனல் லீடர்.


சேகர்
அக் 27, 2025 23:02

எதுக்கு இந்த பில்ட் அப்? நயினாருக்கே டஃப் குடுக்கிறீங்களே? இவர் கொள்கைகளை மற்றவர் வழிமொழிகின்றனர் என்று சொல்ல எப்படிங்க மனசு வந்தது.


K.Ravi
அக் 28, 2025 10:36

இவன் ஒரு கிறிஸ்தவ மிஷனரி கைகூலி, இவருக்கு வேலு, மயிலு என்று ஒன்றும் புரியாது, அவரிடம் போய், கண்ணு அது இது என்று பேசினா எப்படி புரியும், இதல்லாம் காலக்கொடுமை


Mr Krish Tamilnadu
அக் 28, 2025 12:05

திருச்சி தேர்தல் அறிக்கை எண் கூறி செய்தீர்களா என்றார். திருவாரூர் 40 ரூபாய் கமிஷன். கரூர் 10 ரூபாய் பாட்டில் கமிஷன். நாமக்கல் கிட்னி திருட்டு.‌ சேகர் அவர்களே இந்த கருத்து, கொள்கை அல்ல, விஜய் பேசியது மற்ற தலைவர்களால் தற்போது பேசப்படுகிறது. எடுத்து செல்லப்படுகிறது. அரசியலில் மக்கள் உள்வாங்கும் கேள்வி கேட்பதற்கு ஆள் வேண்டும். அடுத்து, ரவி அவர்களே, விஜய் ஜோதிட ஆலோசனை பெறுகிறார். இந்த நிகழ்வுக்கு கிரகங்களும் காரணம். பொதுவாகவே விபத்துக்கள் ஏற்பட்டால், அதற்கு தீர்வு, தற்காப்பு தந்து நிற்பவர் முருகனும், அவரின் வேலும்.


Prabu
அக் 27, 2025 18:23

மகாபலிபுரத்துல ரூம் புக் பண்ணி இருக்கோம் இட்டுன்னு வந்து இட்டுன்னு போக தனியா பஸ் அரேஞ்ச் பண்ணியிருக்கோம் எல்லோரும் வந்து அண்ணனுக்கு ஆறுதல் சொல்லிட்டு போயிருங்க... ட்ராவல் டைம்ல அண்ணா நடிச்ச லியோ, வாரிசு, Goat படம்லாம் போடுவோம்...


என்றும் இந்தியன்
அக் 27, 2025 16:49

நடிகன் / நடிகை பணத்துக்காக எந்த வேலையம் செய்பவர்கள் என்ற எண்ணம் எப்போது டாஸ்மாக் நாட்டு திராவிட மடையன்களுக்கு வருமோ அன்று தான் திருட்டு திராவிட தமிழர்கள் ஆவார்கள் நேர் வழி நடப்பார்கள்


naranam
அக் 27, 2025 16:03

இது எப்படியோ.. அதிமுகவோ கூட்டணியோ என்று யார் வந்தாலும் சரி.. இந்த கையாலாகாத ஊழல் திமுக அரசு ஒழிந்தால் போதும் என்ற நிலையில் தான் தமிழகம் இப்போது இருக்கிறது..


Senthoora
அக் 27, 2025 17:40

அதுக்கு Very Sorry என்று செல்கிறார்கள்


vbs manian
அக் 27, 2025 15:35

மக்கள் மனதை வென்று விட்டார்.


S T Rajan
அக் 27, 2025 15:28

நேரடியாக போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்


Sun
அக் 27, 2025 15:24

விசித்திரமான நடிப்பு அரசியல்வாதி. நல்ல காரியத்திற்கு உரியவர்களை வரவழைத்து ஆசி அல்லது பரிசு வழங்கலாம். துக்க நிகழ்வுக்கு நாம் தேடிப் போய்தான் துக்கம் விசாரித்து ஆறுதல் வழங்கணும். அதுதான் முறையும் கூட. வர வர எந்தக் கஷ்டமும் படமால் அரசியல் செய்யும் அட்டனக் கால் அரசியல்வாதிகள் நாட்டில் பெருகி விட்டனர்.


N Annamalai
அக் 27, 2025 15:08

மாக்கள்


தமிழன்
அக் 27, 2025 15:31

திமுகவுக்கு ஒட்டு போட்டவர்களை சொல்றீங்களா ? கொஞ்சம் விவரமா சொல்லுங்கப்பா..


கனோஜ் ஆங்ரே
அக் 27, 2025 14:39

செத்துபோனவங்க குடும்பத்தை, ஏசி சொகுசு பஸ்ல தன் ஊருக்கு அழைத்து, பைவ் ஸ்டார்ல ரூம் போட்டு... அவங்கள சந்தித்து... அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன், வானத்தை வில்லா வளைச்சு உங்க கைல கொடுக்கிறேன்...ன்னு சொல்றதுதான் “ஆறுதலா...?


kjpkh
அக் 27, 2025 15:41

இல்லை. திமுகவினரின் வயிற்றெரிச்சலை ஏற்படுத்துவதற்காக.


duruvasar
அக் 27, 2025 15:43

திராவிட மாடல் அரசியல் செய்ய அவகாசம் கொடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை