உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூழ்ச்சியால் விஜயபிரபாகர் வீழ்த்தப்பட்டுள்ளார்: பிரேமலதா புகார்

சூழ்ச்சியால் விஜயபிரபாகர் வீழ்த்தப்பட்டுள்ளார்: பிரேமலதா புகார்

சென்னை: ‛‛ விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க.,வின் விஜயபிரபாகர் தோற்கடிக்கப்படவில்லை. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு உள்ளார். அங்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்'' என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதாவது: விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் மிக மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். அங்கு அவர், தோல்வியடையவில்லை. தோற்கடிக்கப்பட்டு உள்ளார். வீழ்ச்சி அடையவில்லை. வீழ்த்தப்பட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல வேட்பாளர்கள் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். விஜயபிரபாகர் அப்படி தோற்று இருந்தால் நாங்களும் ஏற்று இருப்போம். ஆனால், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்.முதலில் சொல்லப்பட்ட ஓட்டு எண்ணிக்கைக்கும், பிறகு வெளியிடப்பட்ட ஓட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது. மதியம் 3 முதல் 5 மணி வரை ஓட்டு எண்ணிக்கையை கலெக்டர் நிறுத்தினார். இதற்கு காரணம் என்ன? தனக்கு நெருக்கடி உள்ளது. பலர் நிர்பந்தம் செய்கின்றனர். சமாளிக்க முடியவில்லை என கலெக்டர் , ஓட்டு எண்ணும் மையத்தில் கூறுகிறார். அப்படி செய்தது யார்? மதுரையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் விருதுநகர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? 13வது சுற்றுக்கு பிறகு குளறுபடி நடந்துள்ளது. 13வது சுற்றுக்கு பிறகு 18 வது சுற்றுக்கு சென்றனர். விருதுநகரில் மட்டும் தான் நள்ளிரவு வரை தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்தது. அங்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் நியாயமான மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். அப்போது என்ன முடிவு வந்தாலும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

MADHAVAN
ஜூன் 07, 2024 10:39

விஜயகாந்த் போன்ற நல்ல மனிதரால் தொடங்கப்பட்ட கட்சி இன்று இந்த பெண்மணியின் பேராசையால் இப்படி போய்விட்டது, அரசியலில் காசுக்கு ஆசைப்படும் நபர் என்ற பெயரை ராமதாசுக்கு அடுத்து இந்த பெண்மணி பெற்றுவிட்டார்,


Naga Subramanian
ஜூன் 07, 2024 07:14

அனைத்து இடத்திலும் இவ்வாறே நடந்துள்ளது.


.Dr.A.Joseph
ஜூன் 07, 2024 02:19

விஜயகாந்த் மீது அனைவருக்கும் நன் மதிப்பு உண்டு .அதை அப்படியே மகனுக்கும் எதிர் பார்ப்பது சரி இல்லை. மக்களின் முடிவை சாதாரண தொண்டன் பேசுவதுபோல தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு விமர்சிப்பது நாகரிகமும் இல்லை


Bharathi
ஜூன் 08, 2024 02:49

இந்த அம்மாவுக்கு எந்த காலத்தில நாகரிகம் இருந்திருக்கிறது? பண பேராசை கர்வம் தான்.


idea Raman
ஜூன் 06, 2024 20:53

assembly election admk rulingla dhana nadandhadu.


venkatakrishna
ஜூன் 06, 2024 19:21

ப்ரேமலதா கூறுவது போல் மறு வாக்கு என்னிக்கை செய்தால் உண்மை என்ன என்பது தெரிகிறது


Deva M
ஜூன் 06, 2024 19:08

பிரேமலதா சொல்வது உண்மை


Tiruchanur
ஜூன் 06, 2024 16:15

விஜயகாந்தை அழிச்சதே யார்


Manoharan. S. R.
ஜூன் 06, 2024 15:59

உண்மை


Manoharan. S. R.
ஜூன் 06, 2024 15:58

பிரேமலதா சொல்வது உண்மை


sethu
ஜூன் 06, 2024 15:21

நேர்மையாக திமுக இதுநாள்வரை ஜெயித்தது இல்லை திமுக தமிழனின் துயரம் ,கோபாலபுரம் குடும்பத்தை குறைசொல்லவேண்டாம் தமிழனும் அவனுக்கு எச்சில் சோறுக்குக்கு வாய்பிளந்து நிற்கும் அரசு திகாரிகளும் எப்போதுமுடந்தையாக இருப்பார்கள் நேர்மைக்கு பெயர்போன தமிழனின் வரலாறு இன்று வஞ்சகர்களின் சூழ்ச்சியால் மானங்கெட்ட வாழ்க்கைக்கு தமிழன் உதாரணமாக செத்த பிணமாக வாழ்கிறான் இது காலத்தின் கொடுமை


முக்கிய வீடியோ