உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு: 82.48 % வாக்கு பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு: 82.48 % வாக்கு பதிவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது. மாலை6 மணி நிலவரப்படி 82.48 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன.தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தமிழக போலீசாருடன், மூன்று கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விக்கிரவாண்டி தொகுதியில், 276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j3jr22s7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடப்பதை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் தங்கள் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க, 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது. மாலை6 மணி நிலவரப்படி82.48 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன. வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலை்பபள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 13ம் தேதி நடக்கிறது. அதுவரை ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ديفيد رافائيل
ஜூலை 10, 2024 22:41

DMK பணம் கொடுத்து ஓட்டு போட வச்சுருக்கானுங்க.


sridhar
ஜூலை 10, 2024 21:42

வாங்கிய பணத்துக்கு நல்லாவே வாலாட்டியாச்சு , - ரோடு சரி இல்லை , மழை தண்ணி வீட்டுக்குள்ள வந்திடுச்சு , வேலை வாய்ப்பு இல்ல, கஞ்சா , கள்ளச்சாராயம் அதிகமாயிடுச்சு , பொம்பளைக்கு பாதுகாப்பு இல்ல என்று ஊளை இடக்கூடாது .


Unmai Vilambi
ஜூலை 10, 2024 21:20

குவார்ட்டரும் பிரியாணியும் வெல்லும்


Sundar R
ஜூலை 10, 2024 20:59

If this mid-term poll of Vikravandi is won by PMK, the political history of our Tamil Nadu will be rewritten.


Vaduvooraan
ஜூலை 10, 2024 20:25

என்னாது.. என்னாது..82% சதவிகிதமா? அட்றா சக்க அட்றா சக்க விழிப்புணர்வா அல்லது முன்னூறு குவாட்டர் பிரியாணியா?


கண்ணன்,மேலூர்
ஜூலை 10, 2024 19:06

விக்கிரவாண்டி தேர்தலில் களம் இறங்கிய திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து செத்த 65 பேரின் மரணத்துக்கு வரவில்லை இதுதான் திமுகவின் சமூக நீதி அவர்களுக்கு தேவை பட்டியலின மக்களின் ஓட்டுக்கள் மட்டும்தான் இந்த திமுகவினருக்கு துணை போகும் தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர்கள் என்று தங்களை விளித்துக் கொள்ளும் திருமா செல்வப் பெருந்தகை போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும்...


கனோஜ் ஆங்ரே
ஜூலை 10, 2024 19:29

உன் கட்சிக்கு ஓட்டுப் போடலை.. கவலை உனக்கு... அந்த எரிச்சல்லதான் இப்படி பேசுற...?


தமிழ்ச்செல்வன்,இடையமேலூர்
ஜூலை 10, 2024 18:58

ஒருவேளை இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக தோற்றால் அது ஒட்டு மொத்த தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கும் என எடுத்துக் கொள்ளலாம் பார்ப்போம் 13 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையில்...


sethu
ஜூலை 10, 2024 18:27

திமுகவை பதவியில் வைத்துக்கொண்டு தேர்தல் நடந்தால் வேறு எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது... கள்ள ஓட்டுக்காகவே பிறந்தவர்கள் திமுகவினர் .


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜூலை 10, 2024 17:05

அட்வான்ஸ் wishes their ஓட்ஸ் for money


கனோஜ் ஆங்ரே
ஜூலை 10, 2024 19:30

இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..?


Balasubramanian
ஜூலை 10, 2024 16:36

விக்கிரவன் வாங்கிரவன் இடையே ஏது தேர்தல் - கொடுக்கிற பணத்தை அப்படியே வாங்கி கொண்டு தூணில் குத்து என்றாலும் குத்த வேண்டியது தானே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி