உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரேஷன் கார்டு நகல்பெற மாதக்கணக்கில் காத்திருப்பு

 ரேஷன் கார்டு நகல்பெற மாதக்கணக்கில் காத்திருப்பு

சென்னை: ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்தவர்கள், நகல் கார்டுக்கு விண்ணப்பித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், வீடுகளுக்கு அனுப்ப தாமதம் செய்யப்படுகிறது. இதனால், நகல் கார்டுக்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், நீக்கம் செய்வதர்கள், கார்டை தொலைத்தவர்களுக்கு நகல் கார்டு வழங்கப் படுகிறது. இதற்கு, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பித்தால், வீட்டுக்கு நகல் கார்டு அனுப்பும் திட்டம், 2023ல் துவக்கப்பட்டது. நகல் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, 'ஆன்லைனில்' பணம் செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு, 20 ரூபாய், அஞ்சல் கட்டணம், 30 ரூபாய் என, 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாநிலம் முழுதும் மாதம் சராசரியாக, 10,000 பேர் நகல் கார்டுக்கு விண்ணப்பம் செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கடந்த நான்கு மாதமாக, நகல் கார்டு வழங்கப்படவில்லை. விண்ணப்பம் செய்து பணமும் செலுத்தி, நான்கு மாதங்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ