உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல்களுக்கு நாமும் காரணம்: கமல் பேச்சு

ஊழல்களுக்கு நாமும் காரணம்: கமல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாட்டில் ஊழல்கள் அதிகமானதுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; நாமும் தான் காரணம்; நாம் இல்லாமல் ஊழல்கள் நடக்குமா? என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=81isyqdr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'. இப்படம் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 25) மாலை 7 மணிக்கு வெளியாகிறது. டிரைலர் வெளியீட்டிற்கு முன்னதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: 1996ம் ஆண்டு இந்தியன் படத்தின் டப்பிங்கின் போதே 2ம் பாகம் பற்றி பேசினோம். இந்தியன்-2 படத்துக்கான கருவை எங்களுக்கு இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் இந்த ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் 2ம் வருகைக்கு அர்த்தம் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்ததுபோல் தெரியவில்லை; சந்தோசமாகப் பணியாற்றியுள்ளனர்.நானும், இயக்குநர் ஷங்கரும் மீண்டும் நினைத்தாலும் இதுபோல் திரைப்படத்தை எடுக்க முடியாது என ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சொன்னார். எடுத்திருக்கிறோம். அதுதான் இந்தியன் - 3. நாட்டில் ஊழல்கள் அதிகமானதுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; நாமும் தான் காரணம்; நாம் இல்லாமல் ஊழல்கள் நடக்குமா?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

சிவகுமார்
ஜூன் 26, 2024 08:56

நாம பாக்க வரலைன்னா, காசு குடுக்கலைன்னா இந்த கூத்தாடி பிழைப்புக்கு வருமானம் எது? முதல் கோணல் முற்றும் கோணல் என்பது இவர் போன்ற அறிவு ஜீவிகளுக்குத் தெரியாது போலும்.


PREM KUMAR K R
ஜூன் 25, 2024 19:55

ஊழல் அதிகமாவதற்கு அரசியல்வாதி மட்டும் காரணமல்ல நாமும் தான் காரணம் என்று கமல் அரசியல்வாதியாக கூறாமல் நடிகராக கூறி இருந்தால் மிக பெரிய தவறை செய்திருக்கிறார். தான் சார்ந்த துறையையே குறை கூறி தனக்கு வாழ்வு கொடுத்த திரைப்பட துறையை இழிவு படுத்தியதற்கு இந்திய நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை கண்டிக்க முன்வர வேண்டும்.


Nanda Kumar
ஜூன் 25, 2024 18:40

The way he spoke about corruption is a joke. Looks as if he has discovered a new theory.. After all he is now a politician and a comedy piece, joining the mega-corrupt politicians group looking for more and more benefits


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 18:33

உங்க படங்களைத் தயாரித்த/ ஃபைனான்ஸ் செய்த பலர் IT ரெய்டில் சிக்கினர். அவங்க வெள்ளையிலா சம்பளம் தந்திருப்பாங்க?


பேசும் தமிழன்
ஜூன் 25, 2024 18:33

உண்மை தான்... திமுக ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து..... பிறகு பெட்டி வாங்கி கொண்டு... அதே திமுக கட்சியில்..... உங்கள் கட்சியை அடகு வைத்தால் அது எப்படி ???


vidhu
ஜூன் 25, 2024 17:24

சொம்பு தூக்கி


P.Sekaran
ஜூன் 25, 2024 17:09

அருமையான கண்டுபிடிப்பு இவருக்கு அவார்டு கொடுக்கவேண்டும். திராவிட மாடல் ஆட்சி ஊழலான ஆட்சி என்று நிரூபணமாகியுள்ளது. இந்த கட்சியுடன் உறவாடுவது எந்த விதத்தில் நியாயம்? அரசிடமிருந்து ஒன்றை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கிறது என்றால் லஞ்சம் கொடுத்துதான் பெறுகிறோம். இரண்டு இடத்திலும் இதில் பங்கு உள்ளது. இவனுடைய உடனடி தேவைக்காக கொடுத்தால் அரசிடம் நிறைவேறுகிறது. அரசிடமிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு நம்மிடம் பணம் வாங்குவதுகேவலம் இல்லையா?


Nanda Kumar
ஜூன் 25, 2024 18:41

very true


vbs manian
ஜூன் 25, 2024 17:02

திரையில் ஊழல் எதிர்ப்பு. நிஜ வாழ்வில் ஊழலுக்கு சாமரம்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 25, 2024 16:56

எந்தனிசட்டம் போட்டாலும் திருடிற கூட்டம் திருடிக்கியேதான் இருக்கும். தனி மனித ஒழுக்கம் வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் அதை கற்று கொடுக்க வேண்டும். ஆனால் இன்று கல்வி தனியார் கைகளில் . எல் கே ஜி ஃபீஸ்?


RAJ
ஜூன் 25, 2024 16:31

எவ்வளவு பொறுமைசாலிக்கும் கோவம் கொலபண்ற அளவுக்கு கொண்டு போக முடியும்? இவர் பேச்சை 2நிமிஷம் கேட்டபோதும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை