உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்யால் எங்களுக்கு பாதிப்பு இல்லை: சீமான்

விஜய்யால் எங்களுக்கு பாதிப்பு இல்லை: சீமான்

புதுக்கோட்டை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:நடிகர் விஜய் தீவிரமாக அரசியல் களத்துக்கு வந்து, தன்னுடைய கொள்கையை முழுமையாக சொன்ன பின் தான், அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதை யூகிக்கவே முடியும். தமிழ் தேசிய தத்துவத்தில் நான் உறுதியாக உள்ளேன். பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினால், தி.மு.க.,வின் 22 எம்.பி.,க்களும் பா.ஜ.,வுக்கு முட்டுக் கொடுக்கச் சென்று விடுவர். அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆவதால், தமிழகத்துக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. உதயநிதி, சென்னையில் நடத்திய கார் பந்தயத்தில் உள்ளுர் நபர்கள் யாரேனும் பங்கேற்று வெற்றி பெற்றார்களா? விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்றால், அங்கு சென்று அவர்கள் என்ன பேசுவார்கள்? நினைத்தாலே காமெடியாத்தான் இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என அவர்களாலும் எப்படி பேச முடியும்?ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள். தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். நாங்கள் 2026லும் தனித்து தான் போட்டியிடுவோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களால் தான் எப்போதுமே, மற்றவர்களுக்கு பாதிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை