உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை; 'பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தாது. இதற்கு மாற்றாக, ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத, விரிவான திட்டத்தை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது' என, மத்திய குறு, சிறு மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பரிந்துரை

அதில் கூறியிருப்பதாவது:மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை செய்யும்படி, தமிழக அரசு சார்பில், ஜன., 4ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இந்த திட்டம், ஜாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்தது. அதன்படி, விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள தொழிலை செய்ய விரும்பும் எந்தவொரு நபரும், இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன் பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பை, 35 ஆக உயர்த்த வேண்டும். இதனால், தங்கள் குடும்ப வர்த்தகத்தை தொடரவும், அதை நன்கறிந்தவர்கள் மட்டுமே, இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெறவும் முடியும்.கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு, ஊராட்சி தலைவருக்கு பதிலாக, கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.இந்நிலையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தில் இருந்து, மார்ச் 15ம் தேதி வந்த பதிலில், பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் இல்லை.

முழுமையான ஆதரவு

எனவே, விஸ்வகர்மா திட்டத்தை, தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை, தமிழக அரசு முன்னெடுத்து செல்லாது.சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின் கீழ், தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத, விரிவான திட்டத்தை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்த உள்ள திட்டம், மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிந்திப்பவன்
நவ 28, 2024 18:20

2026 சட்டசபை தேர்தலில் திமுக விற்கு 160 ~ 170 இடங்கள் நிச்சயம்


sivasubu nagaraj
நவ 28, 2024 12:13

arumaiyana mudivu muthalvar avargaley ?


Anantharaman Srinivasan
நவ 28, 2024 11:59

தாத்தா பிள்ளை பேரன் வரிசையாக முதல்மந்திரி துணைமந்திரியாகியிருப்பது என்ன திட்டம். ?? விஸ்வகர்மா திட்டமில்லையா..??


chennai sivakumar
நவ 28, 2024 08:13

திரு ராஜாஜி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு துறையில் தொழில் கல்வி பயிலவேண்டும் என்றார். அப்போது அதை குலக்கல்வி என்று திரித்து ஒழித்து விட்டார்கள். ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது? குலகல்வி மட்டுமே. நடிகர் மகன் நடிகர் ஆகிறார். வக்கீல் வாரிசு வக்கீல் ஆகிறது. டாக்டர் வாரிசு டாக்டர் ஆகிறது. இது குலகல்விதானே. இப்போ ஒரு முறையாக பயின்ற தொழிலாளிகள் கிடப்பது குதிரை கொம்பு ஆக இருக்கிறது. 90 சதவீதம் அறை வேக்காடு தொழிலாளிகள். இப்போது oldwine in a new bottle கதைதான் இந்த விஸ்வகர்மா. அதற்கு சமூக நீதியின் சாயம் இட்டு துரத்தி அடிக்க படுகிறது. History repeats. Thats all


sankar
நவ 28, 2024 09:27

அரசியலே குலத்தொழில் ஆகிவிட்டது


Muralidharan S
நவ 28, 2024 08:10

மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் போய்சேர்ந்து விடக்கூடாது - இதுதான் திராவிஷ மாடல். சுயதொழில் கற்றுக்கொண்டு மக்கள் முன்னேறிவிட்டால், அப்புறம் யார் இந்த விஷ கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவார்கள்.அதனால் தெளிய வெச்சு தெளிய வெச்சு டாஸ்மாக் இல் மக்களை இருக்கும்படி பார்த்துக்கொள்வதே திராவிஷா மாடலுக்கு பாதுகாப்பு.


VENKATASUBRAMANIAN
நவ 28, 2024 07:53

இங்கே ஐடிஐ லவ் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது முதல்வரே. அதேதான் விஸ்வகர்மா திட்டம். அரசியல் செய்வதிற்கு இதுதான் கிடைத்ததா. மக்களை இந்த மாதிரி ஆட்சியை ஒதுக்கவேண்டும். ஏழைகளுக்கு எதுவுமே கிடைக்ககூடாது அவர்கள் குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும். மக்கள் என்றுதான் புரிந்து கொள்ள போகிறார்களோ


மோகன்
நவ 28, 2024 07:37

இந்த அரசுக்கு மக்கள் நலன் விஷயங்கள் எதுவுமே பிடிக்காது. எந்த திட்டத்தில் கமிஷன் வருமோ அதை மாட்டும் தான் செயல் படுத்துவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை