உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னுயிர் காப்போம் 2.23 லட்சம் பேர் பயன்

இன்னுயிர் காப்போம் 2.23 லட்சம் பேர் பயன்

தமிழகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 1.44 கோடி குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில், தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தப்பின், இந்த திட்டத்தில், 10.02 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர்.இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் - 48 திட்டத்தின் வாயிலாக, இரண்டு ஆண்டுகளில், 2.23 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் வகையில், 2 லட்சம் ரூபாய்க்கு, இலவச சிகிச்சை பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 194.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.- மா.சுப்பிரமணியன்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ