உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறு ஆண்டுகளில் கற்றது என்ன: கமல் பதில்

ஆறு ஆண்டுகளில் கற்றது என்ன: கமல் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து, விரைவில் நல்ல செய்தி சொல்லப்படும்,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறினார்.சென்னை ஆழ்வார்பேட்டையில், மக்கள் நீதி மையம் கட்சியின், ஏழாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. கொடி ஏற்றி வைத்து, கமல் இனிப்புகள் வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சு நடக்கிறது. அதை தற்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. விரைவில் நல்ல செய்தி சொல்லப்படும்.இந்த தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அது பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும். கட்சி துவங்கிய ஆறு ஆண்டுகளில் எதை செய்யக் கூடாது என்பதையும், மற்றவர்கள் செய்யாமல் மறந்தது எது என்பதையும், நியாயமான விஷயங்களை யார் சொல்லாமல் விட்டனர் என்பதையும் கற்றுக் கொண்டோம். எங்கள் நேர்மையை கருத்தில் வைத்து, தேர்தல் கமிஷன், 'டார்ச்லைட்' சின்னம் ஒதுக்கி உள்ளது. தேர்தல் பத்திரங்களை நாங்கள் வாங்கியது இல்லை. திருடிய பணத்தில் கட்சி நடத்தவில்லை. சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம். துாசு படிந்து கிடந்த கிராம சபை கூட்டங்களை தட்டி எழுப்பி உள்ளோம். அதுவும் எங்களது மிகப்பெரிய சாதனை தான். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, தொண்டர்களிடம் பேசுகையில், ''நான் கோவை தெற்கு தொகுதியில், 1,728 ஓட்டுகள்வித்தியாசத்தில் தோல்விஅடைந்ததாக கூறுகின்றனர். தோற்றது நான் அல்ல;ஜனநாயகம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kuppan
பிப் 22, 2024 15:06

இப்ப என்ன தினம் "நல்ல செய்தி" சொல்லறேன்னு தினம் குடுகுடுப்பைகாரர் போல் ஒரே பினாத்தலா இருக்கு.


Kuppan
பிப் 22, 2024 15:01

இது என்ன உளறல் நீ வெற்றி பெற்றால் ஜனநாயகம் தோத்தால் அது ஜனநாயகம் இல்லியா? இதை கல்வெட்டுலு எழுதி வைத்துவிட்டு அங்கேயே உக்கார்ந்துக்கோ.


Kuppan
பிப் 22, 2024 14:54

மக்களுக்கு நல்ல செய்தி, நீ கட்சியை கலைத்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறி எங்கேயேயாவது அமெரிக்கா மாதிரி சென்றால் தான் நல்ல செய்தி அதை செய்வாயா?


Shankar
பிப் 22, 2024 13:05

கடந்த ஆறு ஆண்டுகளில் கற்றது திமுகவிற்கு சோம்பு தூக்குவது எப்படி என்று.


kulandai kannan
பிப் 22, 2024 12:36

64 கலைகளும் இவருக்கு அத்துப்படி


Rajarajan
பிப் 22, 2024 12:28

சரி, குளிக்கறதுனு முடிவாகிப்போச்சு. மொண்டு குளிச்சா ஏன்னா, மூழ்கி குளிச்சா என்ன எல்லாம் ஒன்னு தான்.


rajan_subramanian manian
பிப் 22, 2024 11:38

பாராளுமன்றத்தில் கரை வேட்டியுடன் நம்மவர் கூச்சலிடப் போகிறார். சினிமா ஷூட்டிங், பிக் பாஸ் நேரம் போக மீதி நேரத்தில் (யாருமே முழு நேர அரசியல்வாதி இல்லை) பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது போக (மீதி ஒன்னும் இல்லை) தமிழகத்துக்கு எல்லா நலன்களையும் தமது வாத திறமையால் கொண்டுவரக்கூடிய இவரை நாம் இழக்கக்கூடாது. ஆகவே இவரை டெபாசிட் கழட்டி (டெபாசிட் உதயநிதி உபயம்) இங்கேயே இருக்க கோவை மக்கள் அருளவும்.


Harindra Prasad R
பிப் 22, 2024 11:16

எங்கள் நேர்மையை கருத்தில் வைத்து, தேர்தல் கமிஷன், 'டார்ச்லைட்' சின்னம் ஒதுக்கி உள்ளது.... அப்படியென்றால் மற்ற கட்சிகளிடம் நேர்மை இல்லை யா ?? தோற்றது நான் அல்ல ஜனநாயகம்,... அப்படியென்றால்... வென்றால் மட்டும் தான் ஜனநாயகமா ??? என்ன கர்மம் டா சாமி...


Nagarajan Madhavarajan
பிப் 22, 2024 13:32

திமுக கூட்டணியில் நின்று ஜெயித்தாலும் அதில் மட்டும் நேர்மை இருக்குமா.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 22, 2024 11:02

கமல் அவர்களே, யார் உங்கள் கருத்தையும் பேட்டி செய்திகளையும் கிண்டல் செய்தாலும் நான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். ம நீ ம கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவிலும் இதே கருத்தினை எதிரபார்க்கிறேன். (தேவைப்பட்டால் இன்றைய பேட்டியின் நகல் கூட ஏற்புடையதுதான். யாருக்கு ஞாபகம் இருக்கப்போகிறது நீங்கள் ஆறாம் ஆண்டு விழாவுக்கு கொடுத்த அதே கருத்துதான் பன்னிரண்டாம் ஆண்டு விழாவுக்கும் என்று).


Narayanan
பிப் 22, 2024 10:40

கடந்த தேர்தலில் திமுக ஒரு ஊழல் கட்சி என்று பிரச்சாரம் . பழ கருப்பையா அவர்களின் திமுகவினருக்கு எதிரான ஊழல் குறித்து பேசும் போது கைதட்டி ரசித்து . தானும் அவ்வாறே பேசிவிட்டு இன்று திமுகவிடம் சரண்டர் ஆகி . சே என்ன பொழப்புடா ?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி