உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விண்வெளி தொழிலில் என்ன உதவி தேவை? தமிழக அரசிடம் இஸ்ரோ விபரம் கேட்பு

விண்வெளி தொழிலில் என்ன உதவி தேவை? தமிழக அரசிடம் இஸ்ரோ விபரம் கேட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலினை கடந்த வாரம், 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் சந்தித்த போது, 'விண்வெளி தொழிலில், தமிழகத்திற்கு தேவைப்படும் உதவிகள் குறித்த விபரங்களை தெரிவித்தால், இஸ்ரோ உதவ தயாராக உள்ளது' என, தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்தை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைக்கிறது. அங்கிருந்து, தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. அதனருகில், விண்வெளி துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் விண்வெளி தொழில் நிறுவனங்களுக்கான, பொது கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, 100 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசின், 'இன்ஸ்பேஸ்' எனப்படும், இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் முன்வந்துள்ளது. இதற்கு தமிழக அரசு, 40 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இந்நிலையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர், சென்னையில் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

அப்போது பேசப்பட்ட விபரங்கள் குறித்து, இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விண்வெளி தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு சார்பில், விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் தேவைப்படும், தொழில்நுட்ப ஆலோசனைகளை, தமிழக அரசுக்கு வழங்க இஸ்ரோ தயாராக உள்ளது. எனவே, இஸ்ரோவிடம் இருந்து, என்னென்ன உதவிகள் தேவை என்ற விபரத்தை வழங்கினால், அதற்கு தேவையானதை செய்வதாக, தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேவைகள் தெரிந்ததும், அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Velusamy Dhanaraju
மே 28, 2025 17:17

நீங்க அனுப்பும் ஒவ்வொரு ஜாக்கெட்டுக்குள் எங்களுக்கு கமிஷன் வேண்டும்


அப்பாவி
மே 27, 2025 18:38

எல்லா விவரமும் வாங்கிட்டு உ.பி, குஜராத்தில் அதே தொழில்தொடங்கிடுவாங்க.


மீனவ நண்பன்
மே 28, 2025 21:50

குஜராத்தில் டாஸ்மாக் கிடையாது ..தமிழக அரசின் விண்வெளித் துறை ரம்ஜானுக்கு மூணாம் பிறை தெரியுதான்னு பாக்கும் நிலைமையில் தான் இருக்கும் ..திராவிட பஞ்சாங்கம் போடலாம் ..


c.mohanraj raj
மே 27, 2025 15:22

பணத்தை வேறு கிரகங்களில் ஒலித்து வைக்க முடியுமா ? அல்லது தங்கத்தை என்று கேட்டிருப்பார்கள் இந்த விவரம் கெட்டவர்கள் வேறு என்ன கேட்டிருக்கு போகிறார்கள்


ஆரூர் ரங்
மே 27, 2025 14:35

சந்திரன், செவ்வாயில் டாஸ்மாக் கிளை துவக்க உதவி கேட்டாலும் ஆச்சர்யமில்லை.


sureshpramanathan
மே 27, 2025 07:22

ISRO chief cannot even interact with thieves who looted the state Shame on us not removed DMK from power till date Giving them one more year to loot Dangerous people


Palanisamy Sekar
மே 27, 2025 07:00

எங்க குடும்பம் மட்டும் அங்கிருந்து தங்கிக்கொண்டு சம்பாதித்த பணத்தையெல்லாம் அங்கேயே வைத்துக்கொண்டு தினமும் கோட்டைக்கு ட்ராவல் செய்திட முடியும் வகையில் ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்களேன். மத்திய அரசு அதற்கும் இவர்களுக்கு உதவக்கூடும். அப்படிப்பட்ட ஜெகஜாகா கில்லாடிகளிடம் இவரே சென்று கேட்டிருக்கார் பாருங்கள்.நாடு போகிறபோக்கை பார்த்தல் நல்லதுக்கில்லை என்பது மட்டும் புரிந்துகொள்ள முடிகின்றது


ராமகிருஷ்ணன்
மே 27, 2025 05:15

பல்லாயிரம் கோடிகள் சுருட்டிய பணம் உள்ளது. விண்வெளியில் பதுக்கி வைக்க வேண்டும். அதற்கு திட்டத்தை சொல்லுங்க. முக்கியமாக E D வரமுடியாத இடமாக வேணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை