உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபத்தான பாலிகிரிஸ்டல் பந்து தடை செய்ய நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

ஆபத்தான பாலிகிரிஸ்டல் பந்து தடை செய்ய நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் ஆபத்தான 'பாலிகிரிஸ்டல்' பந்துவிற்கு தடை கோரிய வழக்கில், 'இதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டது குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்தது.மதுரை வழக்கறிஞர் கார்த்திக் கண்ணா 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனு: 'பாலிகிரேலேட் கிரிஸ்டல்' என்ற வண்ணமயமான பந்துகள் குழந்தைகள் விளையாட்டுக்குரிய பொருட்களாக கடைகளில் விற்கப்படுகிறது. தண்ணீரில் ஊறவைத்து குழந்தைகள் விளையாடுகின்றனர். அளவில் சிறியதாக இருந்தாலும் தண்ணீரில் ஊறவைக்கும்போது, ரசாயன மாற்றங்களால் பல மடங்கு விரிவடைந்து பந்து போன்ற பெரிய ஜெல்லியாக மாறுகிறது. இதை விழுங்கினால் குடல் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படும். மரணத்தை உண்டாக்கும். இது நாப்கின்களில் ஈரத்தை உறிஞ்ச பயன்படுத்தப்படுகிறது.கிறிஸ்டல் பந்துவில் சீன அல்லது கொரிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. சில நாடுகளில் இப்பந்துகளால் பல குழந்தைகள் இறந்துள்ளன; பல குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்துள்ளது. பிற நாடுகளில் இப்பந்துகள் விற்பனைக்கு 2011 ல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான 'பாலிகிரேலேட் கிரிஸ்டல்' பந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும். இப்பந்துகளைக் கொண்ட பொம்மைகளை இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: சீனாவிலிருந்து இறக்குமதியாகிறது. மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: இதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டது குறித்து மத்திய அரசின் கேபினட் செயலர் ஏப்.,2 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை