உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைலாசா நாடு எங்கே இருக்கு?: ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

கைலாசா நாடு எங்கே இருக்கு?: ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாமியார் நித்யானந்தா ஹிந்துக்களுக்கான தனி நாடாக 'கைலாசா நாடு' உருவாக்கியதாக அறிவித்திருந்த நிலையில், அந்த நாடு எங்கிருக்கிறது என ஜூலை 21ல் அறிவிப்பதாக நித்யானந்தா கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ol2c4jg7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக நித்யானந்தாவே கூறியிருந்தார். அதனை ஹிந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவரே கூறியிருந்தார். தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், அந்நாட்டின் அதிபராக கூறிக்கொள்ளும் நித்யானந்தா அறிவித்தார். ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்,' என கூறப்பட்டுள்ளது. மேலும், 'கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்' என்று ஒரு ஆன்லைன் லிங்க்-ம் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ஒருவழியாக விடை தெரியாத கைலாசா நாட்டின் விலாசம் விரைவில் தெரியவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Santhakumar Srinivasalu
ஜூலை 04, 2024 21:57

இருக்கிற இடத்தை மத்திய அரசு கண்டுபிடிக்க வில்லையா?


Yes
ஜூலை 04, 2024 21:06

கைலாசா ஆஸ்திரேலியா அருகில் உள்ள ஒரு சிறு தீவு.


Santhakumar Srinivasalu
ஜூலை 04, 2024 21:58

இது நம் அரசுக்கு தெரியாதா?


J.Isaac
ஜூலை 05, 2024 16:46

உண்மையான பெயர் என்ன ?


Ramesh Sargam
ஜூலை 04, 2024 17:13

நமது ஹிந்து மதத்தை காப்பாற்ற இவரை எல்லா ஹிந்துக்களும் ஆதரிக்கவேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 04, 2024 19:13

////நமது ஹிந்து மதத்தை காப்பாற்ற இவரை எல்லா ஹிந்துக்களும் ஆதரிக்கவேண்டும்.//// இப்படி பேசித்தாண்டா... உண்மையான ஏழை இந்து மக்களை மொத்தமா கொல்றீங்க... வேலைய விட்டு ஓடிப்போன போலீஸ் கான்ஸ்டபிள் எப்படிடா “போலே பாபா“ சாமியார் ஆனான்... இமயமலைக்கு போய் தவமிருந்தானா... இல்ல அடர் காட்டில் சென்று தவமிருந்தானா... இல்ல அவன் என்ன விசுவாமித்ரனா, இல்ல... வசிஷ்டரா...? என்னங்கடா, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேலைய விட்டுவிட்டு ஓடிப்போய்... கொஞ்சநாளில் சாமியார் சொல்லிட்டு வருகிறான்... அவன் காலடி மண்ணை எடுக்க போட்டி போட்டு... 121 பேர் செத்துப் போயிட்டானுங்க... அவனுங்க இந்து இல்லையா... அவனெல்லாம் முஸ்லீமா... இதுமாதிரி, இந்து மதம் என்ற பெயரைச் சொல்லி எத்தனை பேர் ஏமாத்திட்டிருக்கானுங்க... எந்த மதத்திலாவது இப்படி பாலியல் வன்முறை சிறை சென்ற இந்து சாமியாரையும், கொலை செய்த இந்து சாமியாரையும், கொள்ளை அடித்த இந்து சாமியாரையும், “ராத்திநேரத்து பூஜையில்“...னு பாட்டு பாடிட்டு... கைதுக்கு பயந்தும், நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டு... இந்து.. என்ற தாய்நாட்டை விட்டு ஃபாரினுக்கு ஓடிப்போன இந்த மாதிரி கேப்மாரி, மொள்ளமாரிகளை ஆதரிக்க வேணும்...னு சொல்றியே...? இது அந்த சிவனுக்கும், ராமனுக்கும், ஹனுமனுக்கும் அடுக்குமா... அவங்களே இவனை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே... தன் தாய்மண்ணைவிட்டு தப்பி ஓடிப்போனவன் எப்படி யோக்கியனா இருக்க முடியும்... அவனை ஆதரிக்க சொல்றியே... உன்ன என்ன பெயரிட்டு அழைப்பது...-?


Senthoora
ஜூலை 04, 2024 20:22

நீங்க உங்க வீட்டுக்காரர்களை அவரின் ஆச்ரமத்து கூட்டிட்டு போய் பாருங்க, அதுக்கப்புறம் பேசுங்க,


J.V. Iyer
ஜூலை 04, 2024 17:04

இது தமிழ் நாட்டிலேயேதான் இருக்கும்.


Anand
ஜூலை 04, 2024 17:00

எவரும் மோசம் கிடையாது.


முருகன்
ஜூலை 04, 2024 16:58

நாட்டில் நல்லவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் போது திருடனை பிடிக்க இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என தெரியவில்லை


Pandi Muni
ஜூலை 04, 2024 18:26

அப்படி பார்த்தா முதலில் விஞ்ஞான திருடன் கருணாநிதியையல்லவா கைது பண்ணியிருக்கணும். அடித்து சேர்த்த சொத்துக்களையல்லவா பறிமுதல் பண்ணியிருக்கனும்


vijay kumar, Coimbatore
ஜூலை 04, 2024 16:52

kailasaah naatuuku oru ticket podunga


S. Narayanan
ஜூலை 04, 2024 16:45

நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்கள் இருக்கும் இடம் செல்லும் நம்மால் கைலாச நாட்டுக்கு போக முடியவில்லையே. நம் இந்தியாவில் இருந்து கொண்டு தனி நாடு உருவாக்கி கொண்டு நமக்கே அறிவிப்பு கொடுக்கும் இந்த சாமியார் இன்னும் என்ன என்ன செய்ய கூடும்.


Senthoora
ஜூலை 04, 2024 20:27

அவர் உண்மையை சொல்லுவார் என்று பாக்கிறிங்க, இந்திய புலனாய்வின் தகுதி இதுதான், முடிந்தால் அந்த ஆளை கைது பண்ணுங்க,


J sundarrajan
ஜூலை 04, 2024 16:30

Fake


கோவிந்தராஜ்
ஜூலை 04, 2024 16:08

சுவாமி. அங்கே எனக்கு ஓர் இடம் வேணும்


Veeraputhiran Balasubramoniam
ஜூலை 04, 2024 16:33

அடைக்கலம் கேட்டு போய் விடலாம், இதியாவில் நாம் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி