உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சுற்றுலா வருமானம் ரூ.3,000 கோடி எங்கே போகிறது: பிரேமலதா கேள்வி

 சுற்றுலா வருமானம் ரூ.3,000 கோடி எங்கே போகிறது: பிரேமலதா கேள்வி

ஊட்டி: ''வரும், 2026 தேர்தலில் தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு நேற்று சென்ற பிரேமலதா, அங்கு சாக்லேட் தொழிற்சாலையில், சாக்லேட் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார். பின், முத்தநாடுமந்து தோடர் கிராமத்திற்கு சென்று, தோடர் பழங்குடியின மக்கள் கோவிலுக்கு சென்றார். மேலும் குன்னுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. மலைப்பாதையில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தமிழக மக்கள் சரியான தலைமையை தேர்வு செய்ய தவறி விட்டனர். விஜயகாந்தை முதல்வராக்கி இருந்தால், சிறப்பான ஆட்சி நடந்திருக்கும் என மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். வரும் 2026 தேர்தலில், தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும். விஜயகாந்த் அளவுக்கு, அரசியலில் விஜய் வருவாரா என்பது குறித்து தற்போதே கூற முடியாது. பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு, 18 ரூபாயாக இருந்தது; தற்போதும் அதே விலை தான். ஆனால், 35 ஆண்டுக்கு முன், 65 ரூபாய்க்கு விற்பனையான தேயிலை துாள் இன்று கிலோ, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பசுந்தேயிலைக்கு உரிய விலை இல்லை; அரசுக்கும் கவலை இல்லை. நீலகிரிக்கு சுற்றுலா பயணியர் வருகையால், ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அந்த பணம் எங்கே செல்கிறது. இங்கிருந்து வரும் வருமானத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை