உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 முறை தன்னைதானே சாட்டையால் அடித்தார்

6 முறை தன்னைதானே சாட்டையால் அடித்தார்

சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே 6 முறை சாட்டையால் அடித்து விநோத போராட்டத்தை நடத்தினார். சென்னையில் பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களுடன் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளார். மேலும் தன்னை வருத்தி இந்த போராட்டம் நடத்துவது திமுக அரசுக்கு பாடம் புகட்டவும், மேலும் சாட்டையடி என்பது தமிழ் மண்ணின் மரபுதான் இந்த போராட்டம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

நேற்று அளித்த பேட்டி

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவையில் நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி, சென்னை சைதையில், தி.மு.க., வட்ட பொறுப்பில் இருப்பவர். பல குற்றங்களில் ஈடுபட்ட இவர், தி.மு.க.,வில் சேர்ந்து, முக்கிய பொறுப்பில் உள்ளோருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். ரவுடிகள் அணிவகுப்புக்கு போகக்கூடாது என்பதற்காக, அரசியல் அடையாளம் தேவை. அதை வைத்து, தி.மு.க.,வை போர்வையாக பயன்படுத்தி, மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளார். தி.மு.க.,வில் கட்சி பொறுப்பு உள்ளதால், போலீசில் விசாரிக்க மாட்டார்கள் என்பதை வைத்து தான், குற்றம் செய்கின்றனர். தி.மு.க., என்ற போர்வை இருந்ததால் தான், இந்த கொடுமையை செய்துள்ளார். அதனால், தான் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை இல்லை.

நாசம் பண்ணிட்டீங்களே?

முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர்., எப்படி, 'லீக்' ஆனது? அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், 'நெட்ஒர்க்'கில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த எப்.ஐ.ஆர்., எப்படி வெளியானது? காக்கி சட்டையை போட்டுக் கொண்டு, இப்படி ஒரு எப்.ஐ.ஆர்., எழுதிய உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அந்த குடும்பத்தையே நாசம் பண்ணிட்டீங்களே.

நீதிமன்றத்தில் இந்த எப்.ஐ.ஆர்., நிற்குமா?

தேசிய கட்சிக்கு மாநில தலைவர் என்ற வெங்காய பதவி பொறுப்பில் இருப்பதால், மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன்; வீதிக்கு வந்தால் வேறு மாதிரியாக இருக்கும். நான் பேசுவது மோடியை பிரதிபலிக்கும் என்பதால், மரியாதையாக பேசுகிறேன். எப்.ஐ.ஆரை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. அதனால் தான், ஒரு முடிவு கட்ட வேண்டும் என இருக்கிறேன். எத்தனை முறை பா.ஜ., தொண்டர்களை கைது செய்வீர்கள்? இனி ஆர்ப்பாட்டம் இல்லை; வேறு விதமாகத்தான் 'டீல்' பண்ணப் போகிறோம்.

சாட்டையடி

எனக்கு நானே சாட்டையடி கொடுத்துள்ளேன். முருக பெருமானுக்கு சூரசம்ஹாரம் தீயவர்களை அழிப்பது. என் வீட்டு முன் நின்று, சாட்டையால் ஆறு முறை என்னை அடித்துக் கொண்டேன் . தி.மு.க., ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை, நான் செருப்பு அணிய மாட்டேன். இன்று முதல், 48 நாட்கள் வரை விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி இரண்டாவது வாரம், ஆறுபடை வீட்டுக்கு நான் போகப் போகிறேன்; முருகனிடம் முறையிடப் போகிறேன். ஆரோக்கியமான அரசியல், விவாதம், கட்டுப்பாடு, மரியாதை எல்லாம் எதற்கு? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்; இனி கிடையாது. எனவே, எனக்கு நானே என் வீட்டிற்கு முன்னே சவுக்கடி கொடுத்துக் கொண்டேன். பா.ஜ., கட்சியில் எந்த தொண்டனும் இதை செய்ய வேண்டாம். உங்களோடு இருக்கிறோம் என்பதை மக்களிடம் உணர்த்த வேறு வழி இல்லை.

வெட்கமாக இல்லையா!

குற்றவாளிகளை காப்பது தான் அவர்களது வேலை. நான் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்திருந்தால், சுட்டுத் துாக்கி வீசிவிட்டு சென்றிருப்பேன். அந்த மாதிரி ரத்தம் இது. அரசியலுக்கு வந்ததால், அடங்கி உட்கார்ந்திருக்கிறேன். தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற பொறுப்பால் வாயை பொத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.இவ்வாறு அண்ணாமலை ஆக்ரோஷமாக பேட்டி அளித்தார்.செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின், காலில் போட்டிருந்த 'ஷூ'வை கழற்றி காண்பித்து, ''தி.மு.க., ஆட்சி அகற்றப்படும் வரை, காலில் செருப்பு போட மாட்டேன்,'' என, சபதம் செய்தார்.'நிகழ்ச்சிகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்படுவதாக தெரிகிறது' என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க., போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை கடமையில் தவறிய தி.மு.க., அரசு!

குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விபரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கின்றனர். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை கடமையில் இருந்து தவறியிருக்கிறது, தி.மு.க., அரசு. இது, தனி மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்ட விரோத செயல்பாடாகும். இதற்கு முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியை பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க., அரசையும், காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலினையும் கண்டிக்கிறேன். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். - அண்ணாமலை தமிழக பா.ஜ., மாநில தலைவர்மேலும் முழு விவரங்கள் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்www.dinamalar.com/news/tamil-nadu-news/i-will-not-wear-sandals-until-the-dmk-government-is-overthrown-annamalai-vows-/3815033


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 126 )

கனோஜ் ஆங்ரே
ஜன 02, 2025 12:15

எத்தனையோ டுபாக்கூர பார்த்திருக்கேன்... ஆனா.. இந்தாள போல, ஒரு டுபாக்கூர எங்கேயும் பார்த்ததில்லை... ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்க கிஞ்சித்தும் தகுதியற்ற ஆள் இவர்...


Raa
ஜன 03, 2025 17:39

சரிங்க 200, நீங்க சொன்னா காவேட்டில் எழுதிவிடலாம்.


sankaran
டிச 28, 2024 18:57

2026 லும் தமிழக மக்கள் தீயமுகாவுக்குத்தான் ஒட்டு போடுவார்கள்... 2026 இல் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர் பார்க்கலாம் ...


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
டிச 28, 2024 21:09

உம்மை போன்று இப்படி திமுகவிற்கு மறைமுக முட்டுக் கொடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். கவலை படாதே திமுகவை ஒழிக்கும் வரையில் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டார். அவருக்கு வயது 40 மட்டுமே..


veera
டிச 28, 2024 22:50

AMLA அசோகன் என்ற பெயரில் POMBLA அசோகன்...??


Raa
ஜன 03, 2025 17:40

கலியில் அதுதானே வேண்டும்


Azar Mufeen
டிச 27, 2024 22:20

ஆருத்ரா பணம் மக்கள் கைகளில் கிடைக்கும் வரும் வரை வேறு ஏதாவது பண்ண உத்தேசம் இருக்குதா


Velan Iyengaar
டிச 27, 2024 21:13

இந்த யோசனை கொடுத்தவனை பொதுவெளியில் வைத்து நிஜ கசை கொண்டு விளாறு விளாறு என்று நூறு முறை கசையடி தரணும் ஒரே சமயத்தில் கட்சி மற்றும் ஆட்டுக்குட்டி மானத்தை ஒரேடியாக கப்பல் , விமானம், ரயில் என்று ஏறவிட்டு பங்கம் செய்துவிட்டான்


பேசும் தமிழன்
டிச 27, 2024 23:59

200 ஊவா ஊப்‌பிஸ் கதறுவதை பார்த்தால் ...அடி மிகவும் பலமான அடி போல தெரிகிறது ....அண்ணாமலை அடித்த ஒவ்வொரு அடியும்.... திருட்டு மாடல் ஆட்களுக்கு விழுந்த அடி.


kantharvan
ஜன 02, 2025 16:38

அங்கே அடிச்சா அங்கேதாண்டா வலிக்கும்? இங்க எப்படி வலிக்கும்? பேசும் தமிழன் சாட்டையை வைத்து அடித்து கொள்ளலாமே?? யாருக்காவது வலிக்குதான்னு பார்ப்போம்.


Raa
ஜன 03, 2025 17:52

வேலன்,கோவத்தில் நீங்கள் சுவரில் முட்டிக்கொண்டதுண்டா? தலையில் அடித்துக் கொண்டதுண்டா? அண்ணாமலை செய்தது அதனுடைய அடுத்து வெர்ஷன் தான் .


ராஜேஷ்
டிச 27, 2024 21:06

அண்ணாமலை அவர்களின் செயல் வியப்படைய வைக்கிறது நியாயம்மதும் .


kantharvan
ஜன 02, 2025 16:42

நியாயமாரே?? ன்னு சட்டையை கழட்டி கிட்டு திரிய வேண்டியதுதான் ???


JAYARAMAN
டிச 27, 2024 20:46

அண்ணாமலை தனக்கு தானே கொடுத்துக்கொண்ட ஆறு சாட்டை அடி: 1. இரண்டாயிரம் வாங்கி வோட்டு போடும் சொரணை அற்ற மக்களுக்கான சவுக்கடி 2. ஹிந்து என்ற உணர்வு இல்லாமல் நம்மை இழிவு செய்யும் கட்சிக்கு வோட்டு போடும் தமிழனுக்கான சவுக்கடி 3. மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு தூயவரை புறந்தள்ளிய மக்களுக்கான சாட்டை அடி 4. கயவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்திய மாக்களின் மீது விழுந்த சாட்டை அடி 5. ஒரு நல்ல மாநிலத்தை மயானமாக மாற்றிய மக்களுக்கான சாட்டை அடி 6. வருங்காலத்திலாவது நல்லாட்சி அமைய மக்களை தூண்ட வைக்கும் சாட்டை அடி


பேசும் தமிழன்
டிச 27, 2024 21:39

உண்மையை அப்படியே சொல்லி விட்டீர்கள்..... விடியாத ஆட்சிக்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்


kantharvan
ஜன 02, 2025 16:40

அந்த ஏழாவது எட்டாவது எல்லாம் தர்மடிங்களாண்ணா??


sivansakthi
டிச 27, 2024 19:18

தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலை அவர்கள் வரவேண்டும். மிகவும் அரசியல் நாகரிகம் மிக்க நபர் , மக்களை நேசிக்கும் நபர் , எம் ஜி ஆர் அடுத்து அண்ணாமலை .


kantharvan
ஜன 02, 2025 16:41

எம்ஜியார் நடிகன் அவரைவிட இவன் பெரிய கழை கூத்தாடியோ??


..
டிச 27, 2024 18:44

இப்படி ஒரு தலைவன் வேணும் நமக்கு.எதிர்காலத்தில் இவருடைய ஆட்சி ஏற்பட்டால் தவறு செய்தால் தண்டனை உண்டு.இவர் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நமக்காக உழைப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது


Ramesh
டிச 27, 2024 18:37

ஜெய் அண்ணாமலை


kantharvan
ஜன 02, 2025 16:41

ஜெய் ஷா??


N Annamalai
டிச 27, 2024 17:10

நடக்கவே நடக்காது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை