உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாவோஸ் நகரில் நடந்த மாநாட்டில் பெறப்பட்ட, முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார அமைப்பின், 2025ம் ஆண்டுக்கான கூட்டம் நடந்தது. உலக அளவிலான வணிக நிறுவனங்களின் தலைவர்களும், அரசு துறையை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.இம்மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த, பல்வேறு மாநிலங்களும் பங்கேற்றன. தமிழகம் சார்பில், அமைச்சர் ராஜா பங்கேற்றார். மகாராஷ்டிரா, உத்தரபிரசேதம், ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள், பெருமளவு முதலீட்டை ஈர்க்க, புரிந்துணர்வு ஒப்பந்தகங்கள் கையெழுத்தானதாக, செய்திகள் வந்துள்ளன.ஆனால், தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற விபரம் தெரியவில்லை. தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய, விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறுவதில், எந்தவித உண்மையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நடத்திய, உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என, ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு; தற்போது டாவோஸ் மாநாட்டில் பெறப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு; இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Laddoo
ஜன 27, 2025 19:02

பத்துத் தோல்விக்கு ஒரே கேள்வி. நீங்க பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த போது கியா சேர்மன் தங்களுடைய கார் தொழிற்சாலையை ஓரகடத்தில் அமைக்க அனுமதி வேண்டி 3 நாட்கள் காத்திருந்தார். உங்க கமிஷன் ரேட்டை கேட்டு ஆந்த்ராவிற்கு சென்று விட்டார். அதேபோல கிடேக்ஸ்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 11:16

எடப்பாடியார் மற்றும் அன்புமணி ஆகியோர் மட்டுமே விடியலார் கொண்டுவந்த முதலீடு குறித்துக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் பலர் அதிமுகவை திமுகவின் பி டீம் என்கிறார்கள் .......


Palanisamy T
ஜன 28, 2025 15:29

அன்புமணி கேள்விக் கேட்கின்றாரா ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர் மட்டும் மக்களுக்கு என்ன செய்து விடுவார். அவர் மக்களை மறந்து வெகு நாளாகிவிட்டது. அவர் முதலில் தமிழர். அதையும் மறந்து, அவர் இப்போதெல்லாம் 10.3 என்ற சாதியிட போராட்டங்கள் பற்றித்தான் பேசுகின்றாறார், நாளை அவர் தமிழகத்தின் நல்ல முதல்வராக வரவேண்டுமென்று எதிர்ப்பார்த்தேன் இப்போது அதுவும் நடக்காதென்று தெரிந்துவிட்டது . நாளை இவராலும் தமிழகத்திற்கு எந்த பெரிய நன்மைகளும் ஏற்படப் போவதில்லை.


Yes your honor
ஜன 27, 2025 10:22

வெள்ளை அறிக்கை தானே, அதுதான் பெயரிலேயே உள்ளதே. ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து திருப்பித் திருப்பி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்க்கு ஏன் அரசாங்கத்தை டிஸ்டர்ப் செய்கிறீர்கள்.


M Ramachandran
ஜன 27, 2025 09:24

வெள்ளை அறிக்கையென்றால் வேறு ஏதோர் அர்த்தம் மென்று நினைத்து விட போகிறார்கள். அதனால் பேரியாரிஸத்தில் போய் தேட போகிறார்கள்?


Barakat Ali
ஜன 27, 2025 08:32

நான் சென்று வந்ததால் ஒரு பயனும் இல்லை ன்னு வெளிப்படையா எழுத்து மூலமா ஒத்துக்க அவருக்கு மனசு வரும்களா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 11:14

போனதே சொந்த முதலீட்டுக்காக இருக்கலாம் .... அல்லது ட்ரீட்மெண்ட்டுக்காக இருக்கலாம் .... குதித்துப் பேசும் பழக்கம் இப்போது இல்லை என்பதை எத்தனை பேர் கவனித்தார்களோ ?


S.L.Narasimman
ஜன 27, 2025 07:53

முதலீடுகள் ஏதும் வந்திருந்தாதானே வெள்ளை அறிக்கை விடியல் கொடுக்க முடியும். இவர்கள் அங்கே மக்கள் பணத்தின் செலவிலே ஊர்சுற்றி பார்த்து வந்ததிற்கு எப்படி எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்க முடியும்.


V GOPALAN
ஜன 27, 2025 06:59

சன் குடும்பத்திற்கு இதுநாள் வரை 6 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது என்பது மட்டும் அனைவரும் அறிவர்


raja
ஜன 27, 2025 06:59

வடிவேலு டிரவுசர் பாக்கட்ட வெளியில் இழுத்து விட்டு ஒன்னும் இல்லைன்கிற காமடி தனம் தான் செய்ய முடியும் இந்த ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திருட்டு திராவிட குடும்ப தலைவன் இருவத்தி மூனாம் புலிகேசியால்....


Kasimani Baskaran
ஜன 27, 2025 06:20

வெள்ளைக்கும் தீம்காவுக்கும் ஆகாது... ஆகவே கறுப்பு அறிக்கை வேண்டுமானால் கொடுப்பார்கள்..


தாமரை மலர்கிறது
ஜன 27, 2025 02:55

முதலீடு முட்டை. இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை? தேவை இல்லாத செலவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை