மேலும் செய்திகள்
சித்தராமையாவுக்கு உடல்நல குறைவு
5 minutes ago
15 ஆண்டுக்கு மேல் ஓடிய 3,212 அரசு பஸ்கள் நிறுத்தம்
8 minutes ago
ஓய்வூதியர் தின வாயிற் கூட்டம்
36 minutes ago
குவாரி அனுமதி ரத்து செய்யக்கோரி முற்றுகை
37 minutes ago
நாம பரிக்ரம அபியான் மூலம் கிராமம் கிராமமாக விவசாயிகளை சந்திக்கும் நிகழ்வில் தொண்டாமுத்தூர் ஆலாந்துறையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் பங்கேற்று பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் பாசிசத்தை ஒழிப்பதாக பிரச்சாரம் செய்துவருகிறார். ஆனால் அந்த விளம்பரங்களை கொடுக்கும் திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி பாசிசத்தை ஒழிப்போம் என்று விளம்பரம் செய்கிறார்கள். பாசிசத்தை ஒழிப்பதிலேயே பாசிசத்தை கடைபிடிக்கும் கட்சி திமுக. ஆனால் பிரதமர் மோடி ஆணையிடவில்லை. உத்தரவாதம் தருகிறார். இந்திய மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் பாதுகாப்பு தருகிறார்.இந்தியாவின் இறையாண்மை, ஆன்மீகம்,கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க உத்தரவாதம் தருகிறார். மக்கள் நலத்திட்டங்கள் மூலமாக வாழ்வாதாரம் மேம்பட உத்தரவாதம் தருகிறார். எனவே திமுகவின் திராவிட மாடல் போலி பாசிச எதிர்ப்பு என்ற பிரச்சாரம் மக்களிடம் செல்லுபடியாகாது. வளர்ச்சி என்ற மோடியின் உண்மையான பிம்பத்தை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். பிரதமர் சார்பாக வணக்கத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
5 minutes ago
8 minutes ago
36 minutes ago
37 minutes ago