உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

எதிர்பார்த்த அரசியல் பேசுவதை நடிகர் விஜய் தவிர்த்தது ஏன்?

சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் நடிகர் விஜய், பரபரப்பாக அரசியல் பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பற்றி வாயே திறக்காமல் ஜகா வாங்கினார். அதற்கு காரணம் என்ன வென்று தெரியவந்துள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு நடிகர் விஜய் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் கட்சி தலைவர்களுக்கும், பண்டிகை நாட்களில் மக்களுக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்து இருந்தார். அரசியல் ரீதியில் எந்த கருத்தும் கூறிவில்லை. விமர்சனமும் செய்யவில்லை.இன்று, தமிழகத்தில் உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கட்சி துவங்கிய பிறகு , இந்த விழாவில் பங்கேற்கும் விஜய், பரபரப்பாக அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பார், போதை பொருள் நடமாட்டம், கள்ளச்சாராய மரணங்கள், ஊழல் பற்றி பேசுவார் என பலரும் எதிர்பார்த்தனர். இதனால், விழா குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த விழாவில் விஜய் பேசுகையில், தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை. நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைவர்களாக வர வேண்டும். மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இது ஒரு பெற்றோர் ஆகவும், அரசியல் தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க என சொல்ல நான் இங்கு வரவில்லை. அதற்கான மேடையும் இது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

காரணம் என்ன

ஆளுங் கட்சியை விமர்சிப்பதை விஜய் தவிர்த்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று கூறப்படுகிறது. அவரது அடுத்த படம் ‛ கோட்' சுமார் 300கோடியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சி பற்றி எதையாவது பேசப் போய், அதனால் அவர்களுக்கு கோபம் ஏற்பட்டு ‛ கோட்' படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களின் ரிலீஸ் ஒரு நாள் தள்ளிப் போனால் கூட பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த நிலைமை ‛ கோட் ' படத்திற்கு வரக்கூடாது என்று விஜய் நினைத்து இருக்கலாம்.இந்த விஷயத்தில் அவர் ஏற்கனவே சூடுபட்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இவரது ‛ தலைவா ' படத்திற்கு தலைவலி ஏற்பட்டது. தலைப்பிலேயே அரசியல் கலந்ததால், ‛ நான் ஒரு தலைவர் இருக்கும் போது இன்னொரு தலைவரா' என்று நினைத்த ஜெயலலிதா, தலைவா படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டார். பல நாட்களாக படத்தை தியேட்டரில் ஓட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல் கோடநாட்டிற்கு தேடிச் சென்று அங்கு தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்தித்து சுயவிளக்கம் கொடுக்க முயற்சி செய்தார் விஜய். ஆனால் சந்திக்க முடியவில்லை. பிறகு சுயவிளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டார். அதன் பிறகு தான் ‛தலைவா' வுக்கு தலைவலி சரியாகி, படம் ரிலீஸ் ஆனது. அந்த பாடத்தை கற்றுக் கொண்ட விஜய், ‛ கோட் ' படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியல் பேசாமல் அறிவுரை மட்டும் கூறி விடை பெற்றுவிட்டார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Velan Iyengaar
ஜூன் 28, 2024 22:05

வேறென்ன ... குண்டு இல்லாத துப்பாக்கி சும்மா .... உல்லுலாயி.........வேற மாதிரி கூட சொல்லலாம் ......ஹி ஹி ஹி .... இதையே வெளியிடுவாங்களா என்று தெரியவில்லை ......சினிமா ak47 அது எப்படி வேலை செய்யும் ????


D.Ambujavalli
ஜூன் 28, 2024 20:17

மெத்தப்படித்த, மேல் நாட்டிலும் பதவி வைத்த பிடிஆர் சாதிக்க முடிந்தது? படித்தவர், அறிவாளி, இவர்களெல்லாம் அரசுக்கு அலர்ஜியானவர்கள் பாராட்டு கவிதைகள் பார்லிமென்டிலும், சட்டமன்றத்திலும் பாடிவிட்டு ஊழல், லஞ்சம், கமிஷனில் ஒழுங்காகப் பெரிய இடத்துக்குப் பங்கு கொடுப்பவர்கள்தான் நிலைக்க முடியும் இவர் இன்னும் அரசியலில் காலூன்ற இல்லை, படங்களும் பிரசனையின்றி ஓடியாக வேண்டும் இத்தனை இருக்க, எப்படிக் குரல் எழும்பும்


KayD
ஜூன் 28, 2024 18:55

goat ரிலீஸ் ஆகி ஓடனுமே இல்லைனா goat பிரியாணி தான்


தாமரை மலர்கிறது
ஜூன் 28, 2024 18:51

விஜய் அரசியல் தலைவராக தன்னை தானே நினைத்து கொண்டிருப்பது தான் மிகப்பெரிய காமெடி. விஜய் ஒரு நடிகர். அவர் எப்போதும் ஒரு நடிகராகவே இருப்பார். அவரது நல்ல ஜோடியாக த்ரிஷா இருப்பார். அவ்வளவு தான் இவரோட அரசியல் ஸ்டோரி.


Velan Iyengaar
ஜூன் 28, 2024 22:07

திரிஷா ... அது ரொம்போ முக்கியம் ..... அந்த திரி எதை எப்போ பத்தவைக்கும் என்று தெரியாது ......


Ms Mahadevan Mahadevan
ஜூன் 28, 2024 18:37

இருக்கிற கட்சி போதாதா? இவர் கட்சி ஆரம்பித்து. கூட்டணி வைத்து .... அதிக கட்சிகள் நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு. ஆபத்து


RajK
ஜூன் 28, 2024 18:03

விஜய் அரசியல் பேசியதாகவே தோன்றியது. படித்த திறமையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியதே திமுக தலைமைக்கு எதிரான கடும் சொற்கள் அல்லவா? விஜய் கூறியது போல படித்த திறமையான அரசியல்வாதி தமிழகத்தில் ஏற்கனவே அண்ணாமலை உள்ளார். படித்தவர்கள் எல்லாம் திறமையானவர்களாக நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. திறமையானவர் என்பதற்கு மேலாக நேர்மையாக அரசியலை சந்திக்க உறுதி எடுத்து பணம் கொடுக்காமல் 4,50,000 ஓட்டுகள் வாங்கி சாதனை புரிந்துள்ளார்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 18:53

\\ படித்த திறமையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியதே திமுக தலைமைக்கு எதிரான கடும் சொற்கள் அல்லவா? //// ஸ்டாலின் கல்லூரிப்படிப்பு படித்தவர் ......


Gopinathan S
ஜூன் 28, 2024 17:57

படிப்பது பகவத் கீதை , இடிப்பது பெருமாள் கோவில் கதைதான்.... சினிமாவில் மில்லி உள்ள போனா கில்லி வெளிய வரும் , இப்படியெல்லாம் பாடிவிட்டு போதை பொருள் புழக்கத்தை பற்றி கவலையும்.... பின்னாடி பாருங்க அந்த புல்லிங்கோ விசிலடிச்சான் குஞ்சுகளை , நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்....


Velan Iyengaar
ஜூன் 28, 2024 22:09

திரி ....எப்போ எதை பத்தவைக்கும் ?? திரி க்கு அப்புறம் ஷா போட்டா என்ன ??? போடாட்டி என்ன ??? அது தான் பல முறை போட்டாச்சே


Balamurugan
ஜூன் 28, 2024 17:54

அப்புறம் என்ன கூந்தலுக்கு அரசியலுக்கு வரணும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 17:12

திமுக அடிமைகளைத் தவிர வேறு யாரும் விஜய்யின் அரசியல் வருகை பற்றி சந்தோசப்படவில்லை .... இதிலிருந்தே அறியலாம் விஜய்யை களம் இறக்கி ஆதாயம் அடைவது யாரென்று ......


Anand
ஜூன் 28, 2024 16:10

குடிகாரன், பொறம்போக்கு, பொறுக்கி, என சமூக விரோத வேடங்களில் நடித்து வருங்கால இளைஞர்களை கெடுத்து குட்டிசுவராக்கிவிட்டு இப்போது தத்துவம் பேசுகிறான்.


Velan Iyengaar
ஜூன் 28, 2024 22:14

சங்கவி .. கூட நடித்தபோது ... இப்படி பின்னாடி வேற மாதிரி பேசவேண்டி இருக்கும் என்று இதுக்கு தெரியாது இது ஒரு புது காளான் .... மழைக்காலம் முடிந்தா ... காளான் என்ன கதி அடையும் ?? அது தான் .... அதுவே தான் .....


மேலும் செய்திகள்