உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: தலைவர் பதவிக்கு ஏன் வந்தோம்னு உங்களை நொந்து போக வச்சிடுவாங்க!

டவுட் தனபாலு: தலைவர் பதவிக்கு ஏன் வந்தோம்னு உங்களை நொந்து போக வச்சிடுவாங்க!

தமிழக காங்., தலைவர் அழகிரி:

'சீட்' வாங்குவதற்காகவே நாங்கள் கட்சி நடத்துவதாகவும், தனிப்பட்ட நபர்களுக்கு தொகுதிகள் கேட்பதாகவும், அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். அது, தி.மு.க., விதிகளுக்கு முரணானது; தவறானது. அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என, தி.மு.க., தலைமை சொல்ல வேண்டும்.

டவுட் தனபாலு:

இப்ப தானே ராஜ கண்ணப்பன் ஆரம்பிச்சு வச்சிருக்காரு... இன்னும் போக போக, பலரும் பொளந்து கட்டுவாங்க பாருங்க... 'இந்த தலைவர் பதவிக்கு ஏன் வந்தோம்'னு உங்களை நொந்து போக வச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!--

அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி:

லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அ.தி.மு.க., துவக்கி விட்டது.தேர்தல் தொடர்பாக, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.

டவுட் தனபாலு:

நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள்ளேயே பயணிக்கிற மாதிரி, அந்த நாலு குழுக்களும் ரகசியமா ஆலோசனை நடத்துகிறதா என்ன...? கூட்டணிக்கு எந்த கட்சியும் வராத சூழல்ல, எத்தனை குழுக்கள் போட்டு என்ன புண்ணியம் என்ற, 'டவுட்' எழுதே!--

தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு:

புயல், வெள்ளத்தால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். ஆனாலும், நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஜனவரி 27க்குள், நிவாரண நிதி தருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிதியை தர வேண்டும். இதை வைத்து, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக கூற முடியாது.

டவுட் தனபாலு:-

எப்பவும் மத்திய அரசு மீது ஆவேசமா குற்றம் சாட்டுற நீங்க, அடக்கி வாசிக்குறீங்களே... கேட்ட நிதி கிடைக்கணும்கிற எண்ணமா அல்லது தேர்தலின் போது, ஒட்டுமொத்தமா திட்டி தீர்த்துக்கலாம்னு அடக்கி வாசிக்குறீங்களா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:27

அழகிரி ஒரு காமெடி பீஸ். பாலுவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்


Duruvesan
பிப் 01, 2024 07:20

ஆக அல்லக்கை அழகிரி அழுது நடிப்பது விரைவில் sunnews தொல்லை காட்சியில் எதிர் பாருங்கள்


குமரி குருவி
பிப் 01, 2024 05:49

கட்சியை வளர்த்திருந்தால்பாராட்டி இருப்பார்கள் ..கட்சியைகாலாவதியாக்கினால் திட்டத்தான் செய்வார்கள்..பதவிஆசைக்கு தகுதி வேண்டுமில்ல


Kasimani Baskaran
பிப் 01, 2024 05:37

தீம்காவைப்பொருத்தமட்டில் காங்கிரஸ் என்பது தீம்காவின் கிளைக்கட்சி. ஆனால் காங்கிரஸ் தான் இல்லை என்றால் தீம்கா தமிழகத்தில் ஜெயிக்காது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் தாங்கள் இல்லை என்றால் தீம்கா இல்லை என்ற உண்மையையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆக தீம்கா என்பது பல கட்சிகள் மதவாத அமைப்புகள் நடத்தும் கூட்டாஞ்சோறு போன்றது.


kijan
பிப் 01, 2024 05:36

கண்ணப்பனின் வலி அவருக்கு தானே தெரியும் ... தன்னிடம் தோற்றவரையே ஜெயித்ததாக அறிவித்து .... பிறகு அவருக்கு தேர்தல் வேலை பார்த்து .... இப்போ அவரது மகனுக்கும் தேர்தல் வேலை பார்க்கணும்னா கோவம் வராதா ?


ramani
பிப் 01, 2024 05:04

அழுகிரி ஏன் அரசியலுக்கு வந்தீங்க பணம் சம்பாதிக்க தானே. மக்களுக்கு உஙகளாளோ உங்க கட்சியினாலோ அல்லது உங்க எஜமான் அதாங்க திமுக அவங்களாளோ ஏதாவது நன்மை கிடைச்சிருக்கா. இல்லையே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை