உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் அதிகரித்தும் கடன் உயர்வது ஏன்? இ.பி.எஸ்., கேள்வி

வருவாய் அதிகரித்தும் கடன் உயர்வது ஏன்? இ.பி.எஸ்., கேள்வி

சென்னை:''தமிழக அரசின் வருவாய் அதிகரித்தும், கடன் குறையாமல் அதிகரிப்பது ஏன்?'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., சரமாரி கேள்வி எழுப்பினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - தங்கமணி: பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். கொரோனா காரணமாக, ஓராண்டு எந்த வருவாயும் இல்லை. இவற்றை எல்லாம் சமாளித்து, 10 ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி கடன் மட்டும்தான் வாங்கி இருந்தோம்.நீங்கள் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளீர்கள். இப்படி போனால் எப்படி? அமைச்சர் எ.வ.வேலு: கடந்த மூன்று ஆண்டுகளில், சமூக நலன் சார்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள் நலனுக்காக கடன் வாங்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், பல திட்டங்களை கொண்டு வந்தோம். நீங்கள் கடன் வாங்கி, எந்த பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள்? கடன் வாங்குவது தவறல்ல. ஆனால், அதிக கடன் வாங்குகிறீர்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு: தி.மு.க., ஆட்சியில் செய்த திட்டங்களை புத்தகமாக போட்டுள்ளோம். கடன் கட்டுக்குள் உள்ளது. வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும், வருவாயை பெருக்கவும், அரசு அனைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.பழனிசாமி: தி.மு.க., ஆட்சி வந்த பின், வரிகளை உயர்த்தினீர்கள். இதனால் வருவாய் அதிகரித்தும், கடன் அதிகரிக்கிறது. வருவாய் அதிகரிக்கும்போது, கடன் குறைய வேண்டும். நிதி மேலாண்மைக் குழு போட்டீர்கள். இது தொடர்பான விபரம் பட்ஜெட்டில் இல்லை.தங்கம் தென்னரசு: மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய வரி வருவாய் வரவில்லை. வருமானத்தை கூட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். இ.பி.எஸ்.,: ஜி.எஸ்.டி., வருவாய் அதிகரித்துள்ளது. பல திட்டங்களை அறிவித்துள்ளதாக, அமைச்சர் வேலு தெரிவித்தார். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டு, அந்த நிதியை பயன்படுத்துகிறீர்கள். தங்கம் தென்னரசு: தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தவில்லை. மூவலுார் ராமமிர்தம் திட்டம் தவிர, மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த திட்ட நிதி புதுமைப் பெண் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் வழங்காமல் நிலுவையில் வைத்து விட்டீர்கள். இ.பி.எஸ்.,: தங்கம் விலை ஏறியதால், 'டெண்டர்' விடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதில் உள்ள குறைகளை சரி செய்து, திட்டத்தை தொடர வேண்டும். தங்கம் தென்னரசு: இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தவில்லை. லேப்டாப் கிடைக்கவில்லை. இ.பி.எஸ்.,: அந்த திட்டம் மீண்டும் தொடருமா?தங்கம் தென்னரசு: நிதி நிலைமைக்கு ஏற்ப, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

g.s,rajan
பிப் 22, 2024 21:54

கேள்வி கேட்டால் பதில் கிடைக்கவே கிடைக்காது .....


Kuppan
பிப் 22, 2024 18:31

கேள்வி சரிதான், ஆனா நம்ப யாரும் இல்லியே, விஞ்ஞான ஊழலின் தந்தை என்று பெயர் எடுத்தவரை சட்ட சபையில் புகழும் போதெ உங்க சாயம் வெளுத்து போச்சி, தமிழக அரசியலை கெடுத்து குட்டிசுவராகி ஊழலை அடிப்படை உரிமை ஆக்கிய மேலும் உங்க ஜென்ம விரோதியை புகழும் போது உடம்பு கூசவில்லையா?.


Vaithiyalingam
பிப் 22, 2024 17:27

நீ ஆட்சியில் இருந்தபோது பல லட்சம் கோடி அடித்தட்டு குவிச்சு அடிச்சு குவிக்க பல லட்சம் கோடி கடன் வாங்கி வச்சுட்டு போனிங்களே


jayvee
பிப் 22, 2024 13:49

எடப்பாடி திமுகவின் தலைவர் பழனிச்சாமியின் இப்போதைய போட்டோவை மட்டுமே வெளியிடுங்கள்.. SDPI மீட்டிங் செல்வதற்காக அழித்த விபூதி மற்றும் குங்குமத்தை மீண்டும் வைக்க தயங்கும் பழனிச்சாமியின் உண்மையான ரூபத்தை ஹிந்துக்களுக்கு காட்டுங்கள்


Kadaparai Mani
பிப் 22, 2024 16:26

நேற்று காட்சி ஊடகத்தில் விபுதீஉடன் பார்த்தேன் .


Narayanan
பிப் 22, 2024 12:11

எந்த பெண்களும் இலவசம் கேட்கவில்லை .பேருந்து , மகளிர் உதவித்தொகை , மாணவிகள் உதவி தொகை இதை நிறுத்தவும் . பெண்களை அவமானப்படுத்தவேண்டாம் .


Jysenn
பிப் 22, 2024 12:08

Kamba Ramayanam written by Sekkilaar- Tamil Arivaali EPS.


S.L.Narasimman
பிப் 22, 2024 11:06

சட்டசபையில் திமுக கருணாநிதியை புகழ்ந்து பேசியது உங்க ஓபி எஸ்தான். யாரும் மறக்கலை.


R. Vidya Sagar
பிப் 22, 2024 10:13

லேப்டாப் கிடைக்க வில்லையாம் ஸ்பெயினில் பத்து நாட்களுக்கு மேல் முகாம் இட்டிருந்தாரே, அங்கே இருந்து முதலீடு செய்ய யாரும் கிடைக்க வில்லையா?


M Ramachandran
பிப் 22, 2024 09:58

தவறாக கூறுகிறீர்கள் வருவாய் என்பது குடும்ப வருவாய் அதை எப்படி தமிழக மக்களுக்கு செலவு செய்ய முடியும்


duruvasar
பிப் 22, 2024 07:48

நாம் ஒன்ணுக்குள்ள ஒன்ணுன்னு ஆயிட்டோம் இரண்டு பேருக்குமே இதன் உள்குத்து என்னனு தெரியும் . கேள்வி கேட்கவில்லையென்றால் எதிர்கட்சி இல்லையென்று ஆகிவிடும். எனவே பதுவிசா கேளுங்கள். தவறு ஏதுமில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை