உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன்?: அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி

9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன்?: அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'தமிழகத்தில், 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன் என ஆய்வு செய்து, விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, ஹிந்து அறநிலைய துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ், 2023ல் வழக்கு தொடர்ந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sdvsibnq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய, சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இணையதளம் அப்போது, அறநிலைய துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தணிக்கை அறிக்கைகளை, அந்தந்த கோவில்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு டிச., 19ல் அறநிலைய துறை கமிஷனர், அனைத்து கோவிலின் இணை, உதவி கமிஷனர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ''கமிஷனர் உத்தரவின்படி, எத்தனை பேர் தணிக்கை அறிக்கைகளை கோவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இன்னும் யார் யார் உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதை கண்டறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவில் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கடந்த ஆண்டு அறநிலைய துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதை, இதுவரை அமல்படுத்தாதது ஏன்? அறநிலைய துறை இணை, துணை, உதவி கமிஷனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. இது குறித்து, 2023 மார்ச் 3ல் தலைமை தணிக்கை இயக்குனர், அறநிலைய துறை கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார். அறிக்கை தணிக்கைக்காக கோவில்களின் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காதது ஏன்? அவ்வாறு தணிக்கை செய்யப்படாததற்கான காரணம் என்ன என்பதை, அறநிலைய துறை கமிஷனர் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பழனி, திருச்செந்துார் போன்ற, 50 பெரிய கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கும். அந்த விபரங்களை விரைந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன; இன்னும் எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டியுள்ளது; எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளன. எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறித்த விபரங்களுடன் விரிவான அறிக்கையை,அறநிலைய துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, செப்., 18க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஆக 31, 2025 12:00

தங்கம் எந்த கோயிலில் இருக்கிறதோ அந்த கோயிகளுக்கு மட்டுந்தான் தணிக்கை உண்டு இது அரசின் கொள்கை இல்லை இல்லை கொள்ளை அதுவும் பகல் கொள்ளை


Premanathan S
ஆக 31, 2025 09:26

ஐகோர்ட் கேள்விகளுக்கு பதில் அவசியம் கொடுக்க வேண்டும் என்று அவசர சட்டம் நிரைவேற்ற வேண்டும் அதேபோல் ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் இது ஒரு அப்பாவி இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள்


Mani . V
ஆக 31, 2025 09:05

ஏனென்றால் நடப்பது திமுக ஆட்சி. சே, சே நான் அவர்கள் ஆட்டையைப் போட்டு இருப்பார்கள் என்று சொல்லவில்லை. நேர்மையானவர்கள் கணக்கு கச்சிதமாக இருக்கும் என்று சொன்னேன்.


VENKATASUBRAMANIAN
ஆக 31, 2025 08:23

எங்கே போனார் அமைச்சர் சேகர் பாபு. வாயை திறந்தாலே பொய். குடமுழுக்கு செய்தோம் என்று பெருமை பேசும் இவர்கள் உண்மையாகவே தேவையான பணத்தை விடுவிப்பதில்லை ஊரில் உள்ளவர்கள் வசூல் செய்து நடத்துகிறார்கள்.இதுதான் உண்மை.


Ramesh Trichy
ஆக 31, 2025 09:43

ஊரில் உள்ளவர்களிடம் வசூல் செய்து நடத்தினாலும் முதல்வர் திட்டம் என அழுத்தம் கொடுத்து போட சொல்கிறார்கள்.


Rajan A
ஆக 31, 2025 07:57

ஆண்டி முட்டு மாதிரி - நல்ல கேள்வி, அருமையான கேள்வி, கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது யுவர் ஆனர். பதில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது யுவர் ஆனர். என்னிக்காவது பதில் கொடுத்திருக்கிறோமா? அந்த மாடலை பின்பற்றி இதற்கும் பதில் தரமாட்டார்கள் யுவர் ஆனர்.


ஆரூர் ரங்
ஆக 31, 2025 07:40

ஆலயங்களின் வருமானத்தில் 14 சதவீதம் வரை தணிக்கைக் கட்டணமாக எடுத்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் ஏமாற்றுவது திராவிஷ மாடல்.


V RAMASWAMY
ஆக 31, 2025 07:04

கோர்ட்டார் அவர்களே, கேட்பதோடு நில்லாமல் தண்டனையும் கொடுங்கள் யுவர் ஆனர். இயன்றால் தேவையில்லாத இந்த துறையை தடைசெய்து நீக்கிவிடுங்கள். தமிழக இந்து கோயில்களுக்கும் கடவுள்களுக்கும் பக்தர்களுக்கும் அர்ச்சர்களுக்கும் நன்மை பயக்கும். நாடும் நலம் பெரும்.


G Mahalingam
ஆக 31, 2025 06:17

எவ்வளவு தான் கோர்ட்டு செருப்பால் அடித்தாலும் அதை வாங்கி கொள்கிற திறமை திராவிட மாடல் ஆட்சியில் இருக்கு. திராவிட மாடல் செய்கிறததைதான் செய்கிறார்கள். கோட்டை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.


D Natarajan
ஆக 31, 2025 06:10

உண்டியலில் பணம் போடுவதை நிறுத்துங்கள். இது மிக முக்கியம்


Palanisamy Sekar
ஆக 31, 2025 05:07

மீண்டும் இந்த உத்தரவு குப்பைக்கு போய்விடும். அந்த அளவுக்கு அறநிலைத்துறையின் செயல்பாடு சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கின்ற்து. எந்த துறையை காட்டிலும் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் பக்தர்களுக்கு மிகுந்த சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது. உண்டியலில் போடப்படும் பணம் அனைத்துமே பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்துதரவே கிடையாது. ஆனால் உண்டியலில் போடப்படுகின்ற பணம் வேறு வகைகளில் வெகு ஜோராக திருப்பிவிடப்படுகின்றது. உதாரணத்துக்கு சமீபத்தில் ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு இரண்டு நவீன வசதிகள் நிரம்பிய கார் இரண்டு வாங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கே கொந்தளித்தார்கள். ஆனால் அமைச்சரோ அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. நீதியரசர் இந்த விஷயத்தில் கண்கொத்தி பாம்பாக இருந்து கண்காணிக்க வேண்டும். இதுதான் இந்து பக்தர்களின் முக்கிய கோரிக்கை. தணிக்கைக்கு பின்னர் பாருங்கள் அசந்துபோவீர்கள்.


சமீபத்திய செய்தி