உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!

சென்னை: கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், ''இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்''என மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.சிவங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, கீழடியில், 2014 முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அது பற்றிய, 982 பக்க விரிவான ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் சமர்ப்பித்தார்.அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது. இதற்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கூறியதாவது: கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும். தொல்லியில் துறையில் அரசியல்வாதிகள் ஏதும் முடிவு செய்ய முடியாது. இதில் தொல்லியல் நிபுணர்கள் தான் முடிவு செய்ய முடியும். இது அவர்களின் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sankar Ramu
ஜூன் 10, 2025 16:45

தமிழகத்தில் இதிலேயும் உருட்டல் செய்யும் தமிழக அரசு. நல்ல வேலை ராமசாமிதான் தமிழையே உறுவாக்கினான்னு சொல்லவில்லை அந்தளவுக்கு பொய் பித்தலாட்டம். இவனுங்க ராமசாமிய எப்படி சுதந்திர போராட்ட வீரன்னு உருட்டினார்களோ அந்த மாதிரி பொய் பொய்.


குரு, நெல்லை
ஜூன் 10, 2025 16:29

வரியாக வசூலிக்கும் பணம் என்னவாயிற்று. ரோடுதான் போடவில்லை. ஆஸ்பத்ரி கட்டவில்லை. பின்னர் அந்த பணத்தினை என்ன செய்கிறார்கள். RTE தனியார் பள்ளி சம்பாதிக்க அரசாங்க பணம் கொடுக்க முடிவு செய்ததே முதலில் தப்பு. இங்கே KV மற்றும் NAVODHYA போன்ற பள்ளிகள் திறக்க ஒருபக்கம் எதிர்ப்பு. இன்னொரு புறம் எவனோ சம்பாதிக்க அரசாங்கம் எப்படி பணம் கொடுக்க முடியும். புதிய கல்வி கொள்கை பின்பற்றினால் அரசாங்க பள்ளியிலேயே சம்மந்த பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்பார்களே . எங்கோ இடிக்கிறது


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஜூன் 10, 2025 15:38

அண்ணல் நிராகரித்ததில் மிக முக்கியமான விஷயம் இந்து மதம் அதை சங்கீகள் என்று ஏற்றுக்கொள்கிறார்களா


Oviya Vijay
ஜூன் 10, 2025 15:13

கண்மூடித்தனமாக பிஜேபி யை எதிர்க்காதீர்கள்...நீங்கள் மார்க்க வகையறா என்பது அப்பட்டமாக தெரிகிறது...உங்கள் கருத்து படி, பிஜேபி ஒரு மண்ணும் தெரியாமல் இந்தியாவை ஆளுகிறான்... விடியல் முழு அறிவுடன் தமிழகத்தை ஆளுகிறான்...நீங்களோ, அனைத்தும் தெரிந்துவிட்டு இங்கிருந்து வெட்டியாக கருத்து போடுகிறீர்கள்...அப்படித்தானே...ஜெயபாரத்...


P. SRINIVASAN
ஜூன் 10, 2025 14:34

ஏன் என்றால், இந்த பிஜேபிக்கு ஒரு மண்ணும் தெரியாது.


Madhavan Kandasamy
ஜூன் 10, 2025 14:31

அரசியல்வாதிகள் ஒண்ணும் செய்யமுடியாது என்பது சரிதான். ஆனால், இதைவைத்து அரசியல் செய்யலாம்.


Krishnamoorthy
ஜூன் 10, 2025 14:14

சமஸ்கிருதம் மற்றும் ஆரிய நாகரிகத்திற்கு தேவை இல்லையா


ஆரூர் ரங்
ஜூன் 10, 2025 13:50

அறிவியலுக்கும் திராவிஷத்துக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆரியப் படையெடுப்பு, ஆரிய திராவிட இனப் பாகுபாடு போன்ற கோட்பாடுகளை அண்ணல் அம்பேத்கர் கூட முற்றிலும் நிராகரித்தார். அதற்காக 200s அவரை சங்கி என்பார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை