உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

1,411 இந்திய கோவில் சிலைகள் அமெரிக்காவில் இருந்து திரும்புமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஓய்வுபெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து, 2,900 கோவில் சிலைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. இரு நாடுகளின் விவகாரம் என்பதால், இந்த சிலைகளை மீட்பது எளிதல்ல.இந்திய தொல்லியல் துறை வாயிலாக, தகுந்த ஆதாரங்களுடன், கடத்தப்பட்ட சிலைகள் எங்கள் நாட்டை சேர்ந்தவை தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே மீட்க முடியும். தொடர் முயற்சி இருந்தால் தான் அது சாத்தியம்.அந்த வகையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, 1,411 சிலைகள் மீட்கப்பட்டன. அதில், தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட, 15க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.இந்த சிலைகளை, அமெரிக்க அரசு அங்குள்ளநம் நாட்டு துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டது.ஆனால், அந்த சிலைகள் உரிய கோவில்களுக்கு எடுத்து வரப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கின்றன. இதுகுறித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, சிலைகளை அந்தந்த மாநிலங்களுக்கு எடுத்து வர வேண்டும்.ஒரு சிலையை மீட்பது எவ்வளது கடினம் என்பது, எனக்கு நன்கு தெரியும். இனியும் தாமதம் கூடாது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KO ra
மே 25, 2024 20:28

இவர் சொல்லும் குற்ற சாட்டுக்கள் பற்றி நீதி மன்றம் தானாக முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Kasimani Baskaran
மே 25, 2024 07:18

மீட்கப்பட்ட சிலைகளை இந்தியாவுக்கு கொண்டுவர வசதியில்லையா. கோமாளித்தனமாக இருக்கிறது. அரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்து விரோத அரசு எப்படி உதவி செய்யும்.


தமிழ்
மே 25, 2024 11:30

இந்த விஷயத்துல மத்திய அரசின் நடவடிக்கைதான் மிகவும் முக்கியம்.ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசவேண்டாம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை