| ADDED : செப் 01, 2025 06:20 AM
அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஒரு வாரத்திற்கு முன், அவரை தமிழக அரசு நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு பணி மாறுதல் செய்துள்ளது. 17-பி குறிப்பாணையும் வழங்கியுள்ளது. அரசு மருத்துவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது போன்ற மருத்துவர்களின் கோரிக்கைகளை முன் வைத்து, முறையான விடுப்பு எடுத்துக்கொண்டு, மேட்டூரில் இருந்து சென்னை வரை பாதையாத்திரை மேற்கொண்டார். அதற்காக, அவரை மாற்றம் செய்துள்ளனர். இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் அரசுக்கு கெட்ட பெயரை தான் ஏற்படுத்தும். ஒரு அமைப்பின் தலைவர், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வது இயல்பான விஷயம். இதற்காக பழிவாங்குவது என ஆரம்பித்தால் எந்த அமைப்பின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. சண்முகம், மாநில செயலர், மா.கம்யூ.,