வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐ ஜாலி 1லட்சம் சின்ன வீடுகள்
சென்னை:''ஒரு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்கும் போது, அதற்கான மொத்த நிதியையும் ஒதுக்கி, பணிகளை துவங்குவதில்லை. வருவாய் வரவர பணிகள் நடக்கும்,” என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி கூறினார்.சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதம்:அ.தி.மு.க., செல்லுார் ராஜு: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என்று, அறிவிக்கப்பட்டது. ஆனால், 1,359 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் எப்படி ஒரு லட்சம் வீடுகளை கட்ட முடியும்?அமைச்சர் பெரியசாமி: கனவு இல்லம் திட்டத்திற்கு, 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, 50,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 40,000 வீடுகளில், 'சென்ட்ரிங்' போட்டு முடித்தாகி விட்டது. மே மாதம் ஒரு லட்சம் வீடுகளும் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில், அவர்கள் கட்சியினருக்கு மட்டுமே வீடு கட்டி தரப்பட்டது. அதிலும், 30,000 வீடுகள் கட்டப்படவில்லை. அதை நாங்கள் தான் கட்டி முடித்து கொடுத்தோம். அரசை பாராட்ட மனமில்லை என்றாலும், பேசாமல் இருந்தால் போதும்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மூன்று லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டன. அவரது மறைவுக்கு பின், ஆண்டுக்கு 20,000 வீடுகள் கட்டப்பட்டன. இப்போது, அறிவிக்கப்பட்டதை விட குறைந்த நிதி ஒதுக்கியுள்ளதால், குறைவான வீடுகள் தான் கட்ட முடியும். அதையே செல்லுார் ராஜு குறிப்பிடுகிறார்.அமைச்சர் பெரியசாமி: ஒரு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்கும் போது, அதற்கான அத்தனை நிதியையும் ஒதுக்கி பணிகளை துவங்குவதில்லை. வருவாய் வரவர பணிகள் நடந்து கொண்டே இருக்கும். வருவாய் அடிப்படையில் திட்டங்கள் நடக்கும். முதல்வராக இருந்த உங்களுக்கு இது தெரியாதா?எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு வீடுகள் கட்டப்படுகின்றன என்ற அறிக்கையை, சபையில் வைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இந்தாண்டு மே மாதம் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.எட்டு ஆண்டுகளில் எட்டு லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒரு காலத்தில் மோடி வீடு என, மக்கள் கேட்டனர். இப்போது, கலைஞர் கனவு வீடு என்கின்றனர். மோடி வீட்டை மறந்து, மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
ஐ ஜாலி 1லட்சம் சின்ன வீடுகள்