உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு சிறை

கோவை:கோவை மாவட்டம், பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பொன்னுச்சாமி, 58; கூலி தொழிலாளி. 2020ல், 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் மீது, கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி குலசேகரன், பொன்னுச்சாமிக்கு, ஐந்தாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ