உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒரு கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒரு கிலோ பறிமுதல்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 22; என்பவரது வீட்டில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் பிரகாஷ்சை கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை