மேலும் செய்திகள்
கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு வாகனங்கள்: ராகுல் மகிழ்ச்சி
10 hour(s) ago | 34
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
17 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
17 hour(s) ago
பீஜிங், : சீனாவில் உள்ள ஷான்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இங்குள்ள ஷாங்க்ளூ நகரில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அங்குள்ள நெடுஞ்சாலை பாலத்தின் மீது ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்ததில், 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 31 பேர் மாயமாகினர்.பாலம் இடிந்தபோது, அதன் மீது சென்றுகொண்டிருந்த 17 கார்கள் மற்றும் எட்டு லாரிகள் கீழே விழுந்ததில், அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மீட்புப்படையினர் விரைந்து செயல்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஏழு வாகனங்களை மீட்டனர். மாயமான 31 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
10 hour(s) ago | 34
17 hour(s) ago
17 hour(s) ago