உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தமிழரை வியந்து பாராட்டிய எலான் மஸ்க்: யார் அந்த தமிழர்?

தமிழரை வியந்து பாராட்டிய எலான் மஸ்க்: யார் அந்த தமிழர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், தமிழரான அசோக் எல்லுச்சாமியைப் புகழ்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.கடந்த 2015ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோ பைலட் என்ற தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பக் குழுவை எலான் மஸ்க் அமைத்தார். அந்தக் குழுவில் பொறியாளர்களைப் பணிக்குச் சேர்த்தார். அப்போது அந்த பணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த அசோக் எல்லுச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டில் ஆட்டோ பைலட் சாப்ட்வேர் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு அசோக் எல்லுச்சாமி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தான் டெஸ்லா நிறுவனத்தில், தானியங்கி கார்களுக்கான சாப்ட்வேரை உருவாக்கும் பிரிவில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் பங்கு எத்தகையது என்பதைக் குறிப்பிட்டு, கட்டுரை ஒன்றை எக்ஸ் சமூகவலைதளத்தில் அசோக் எல்லுச்சாமி பதிவிட்டிருந்தார். இந்தக் கட்டுரையை மேற்கோள் காட்டி டெஸ்லாவின் ஆட்டோ பைலட் பிரிவிற்கு அசோக்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனக் கூறி, எலான் மஸ்க் நன்றி தெரிவித்து உள்ளார். எலான் மஸ்க், தமிழரான அசோக் எல்லுச்சாமியைப் புகழ்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது

யார் இந்த அசோக் எல்லுச்சாமி?

அசோக் எல்லுச்சாமி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் அமெரிக்கா சென்ற அசோக், பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ரோபாட்டிக் சிஸ்டம் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

cbonf
ஜூன் 10, 2024 23:04

உலகத்திலேயே மிகவும் புத்திசாலி தமிழன்தான். ஆனால் தேர்தலில் ஒட்டு போடும்போது தான் தமிழனின் புத்தி பேதலித்துவிடுகிறது


Krishna
ஜூன் 10, 2024 19:27

பாராட்டுவது வெளி நாடுகளில் மிக பெரிய இருக்கும்.ழக்கம். இந்தியாவில் டாடா நிறுவனத்தை தவிர எங்கும் இதை பார்த்ததில்லை. அரசுடமை அமைப்புகளில் போட்டி பொறாமை மிகுந்ததாக இருக்கும்.


வல்லவன்
ஜூன் 10, 2024 18:04

அசோக் மஸ்க்கை பாராட்டினார் மஸ்க்கு எல்லுவை பாராட்டினார் இதிலென்ன ஸ்பெஷல்???


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ