உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் கொரியா பேட்டரி ஆலையில் தீ: 20 வெளிநாட்டவர்கள் கருகி பலி

தென் கொரியா பேட்டரி ஆலையில் தீ: 20 வெளிநாட்டவர்கள் கருகி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வெளிநாட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தென்கொரிய நாட்டின் ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 20 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். 23 தொழிலாளர்கள் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை