உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு : முதலிடம் பிடித்து அமெரிக்கா அசத்தல்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு : முதலிடம் பிடித்து அமெரிக்கா அசத்தல்

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்கா.பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்தது. அமெரிக்காவின் மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் அமெரி்க்கா தங்கம் வென்றது. இதனையடுத்து பதக்க பட்டியிலில் 40 தங்கம் வென்று அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.அதே அளவிற்கு தங்கம் வென்றுள்ளது சீனா. இருப்பினும் வெள்ளி ,மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற வகையில் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 40 தங்கம் 44 வெள்ளி,42 வெண்கலம் என மொத்தமாக 126 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. 40 தங்கம் 27 வெள்ளி 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை பெற்று சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 20 தங்கம், 12 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு 71 வது இடம்

பதக்கப்பட்டியலில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை பெற்று 71 வது இடத்தை பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Jai
ஆக 12, 2024 14:10

வெற்றி என்பதை ஒற்றை புள்ளியாக நினைத்து வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவது இங்கு கடினம். மக்கள் குறும் வீடியோக்கள் பார்க்காமல் 10 மணிக்கு படுத்து காலை 5 மணிக்கு எந்திரிக்க முடியவில்லை. அதில் தான் வெற்றி மறைந்து, தோல்விகள் வந்து ஒட்டிக் கொள்கின்றனர். மக்களை ஒழுக்கப்படுத்துவதில் சீனா போன்று வேறு எந்த நாடும் இருக்க முடியாது. ஒழுக்கம் என்பது இங்கு மிகக் கடினமான விஷயம். வீரர் மட்டுமல்லாமல் பயிற்சியாளரும் இப்படிப்பட்ட ஒழுக்கத்தையும் கடினம் முயற்சியையும் அழித்தால் தான் தங்கப் பதக்கத்தை எட்ட முடியும்.


A Muthu Raman
ஆக 12, 2024 09:03

அமெரிக்க ஜனத்தொகை 34 கோடி மட்டுமே ....இந்தியா ஜனத்தொகை 144 கோடி .... ஒரு தங்கம் கூட வாங்க முடியவில்லை .... வருந்த வேண்டிய விசயம் .....


Kasimani Baskaran
ஆக 12, 2024 05:20

இந்தியா இன்னும் நிறைய உழைக்கவேண்டும். உழைப்பால் சாதிக்க முடியும். கார் பந்தயத்தை நடத்தி விட்டால் பதக்கங்கள் கிடைக்காது.


R Kay
ஆக 12, 2024 02:33

நாம் ஒன்றும் பிற நாடுகளைப்போல விளையாட்டு வீரர்களை import செய்வதில்லை. அயல்நாட்டு வீரர்களை பணத்தை காட்டி citizenship கொடுத்து வளைத்துப்போடுவதில்லை. நம்மிடையே உள்ள திறமையை வைத்தே சமாளிக்கிறோம். கான்+க்ராஸ் ஆட்சிக்காலங்களைப்போல விளையாட்டிலும் ஊழலில் இப்போது. முன்பெல்லாம் வீரர் ஒருவர் வெளிநாடு சென்றால், officials, அவர் மனைவி, துணைவி, இணைவி, மச்சான், குடும்பமென பத்து இருபது பேர் உடன் அரசுப்பணத்தில் ஊர் சுற்ற செல்வதில்லை.


Ramesh Sargam
ஆக 11, 2024 22:09

முதல் இடம் இந்தியாவுக்கு - மக்கள் தொகையில். 71 இடம் இந்தியாவுக்கு - நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில்


SANKAR
ஆக 11, 2024 22:02

arur rung any comment?


Kumar Kumzi
ஆக 11, 2024 23:32

விளையாட்டை ஒரு விளையாட்டை பாரு அதால் நாட்டுக்கு பெரிய மாற்றம் வர போவதில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை