உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.நேற்று(ஆக.01) பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதினர். ரியோ (வெள்ளி, 2016), டோக்கியோ (வெண்கலம், 2021) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, பாரிசிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.முதல் செட்டை 19-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டைவிட்டார். முடிவில் சிந்து 19-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்லும் சிந்துவின் கனவு தகர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kulandai kannan
ஆக 02, 2024 09:35

தமிழக விளையாட்டு அமைச்சர் இவ்வளவு விளையாட்டாக இருந்தும் தமிழக வீரர் யாரும் ஜொலிக்கவில்லையே??


SUBBU,MADURAI
ஆக 02, 2024 06:47

விளையாட்டில் கவனம் செலுத்துவதை விட்டு விளம்பரப் படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டியதால் வந்த விணை..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை