உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரஷ்யாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு, மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (ஜூலை 08) பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ரஷ்ய அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கை கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர். இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பங்கேற்கிறார். நாளை (ஜூலை 9) ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அவர் நாளை ஆஸ்திரியாவுக்கு செல்ல உள்ளார்.முன்னதாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். இந்தியா - ரஷ்யா உடனான உறவு கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rpalnivelu
ஜூலை 08, 2024 21:53

மிஸ்டர் வட்சன் என்கின்ற 200 ரூவா உபியே உனக்கு மணிப்பூரை பற்றிய அறிவு இருந்தால் நல்லது. அங்கு சீன இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அதற்கு தூபம் போடுவதற்கு தேச விரோத சக்திகளான இத்தாலிய மாபியா தீவிரவாதிகளுக்கு உதவுகிறது.


Ganesun Iyer
ஜூலை 08, 2024 21:40

பாய்.. கள்ளக்குறிச்சி எட்டிபாக்கதவரு அமெரிக்கா போக போறாரு..அதபத்தி சொல்லு..


தேச நேசன்
ஜூலை 08, 2024 20:44

உலகத்தலைவர் மோடிஜி க்கு வாழ்த்துக்கள். சண்டை போடுற இரண்டு நாடுமே மோடிஜியை மிகவும் நம்புகின்றன. மோடிஜி யின் ஆலுமை அப்படி பட்டது. மணிப்பூர் பிரச்சினை இன்டி கூட்டணி உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள் அதனால் பாதிப்பு மணிப்பூர் மக்களுக்கு தான்.


Vathsan
ஜூலை 08, 2024 19:25

வெளிநாட்டு பயணம் என்றால் பொட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவாரு . இந்த பிளைட் எல்லாம் மணிப்பூர்ல நிக்காதா?


hari
ஜூலை 09, 2024 10:37

உங்க முட்டு வண்டி கள்ளக்குறிச்சி போகுமா...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி