உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: மீண்டும் தொடங்கியது ஹிஸ்புல்லா

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: மீண்டும் தொடங்கியது ஹிஸ்புல்லா

பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்தியக்கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹமாஸுக்கு ஆதரவு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

படுகொலை

இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

தாக்குதல் நடத்த உத்தரவு

எனவே, இஸ்மாயில் ஹனியே கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெளியேறுங்கள்

இந்தப் போர் பதற்றம் காரணமாக, லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை, உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

போர் பதற்றம்

இந்த நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

veeramani
ஆக 05, 2024 09:54

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கிறது. நமது இந்திய ஒரு பெரிய குடியரசு.. சந்தேகம் யில்லை. வெளி நாட்டில் நடக்கும் சண்டைகள், பிரச்சினைகள், சச்சரவுகள் போன்றவற்றிற்கு இந்திய நாட்டில் ஊர்வலம் நடத்துவது, பேரணிகள் நடத்துவது, வெளி நாட்டை பற்றி கீழ்த்தரமாக பேசுவது உடனடியாக தடை செய்யப்படவேண்டும் ஒரு சில அமைப்புகள் இதில் தீவிரமாக உள்ளன. இதனால் நமது நட்பு நாடுகளிடம் பிரச்சினைகள் வரலாம்


subramanian
ஆக 04, 2024 22:21

தீவிரவாதம் கைவிட வேண்டும்.


Bye Pass
ஆக 04, 2024 08:08

எந்த நாட்டிலிருந்து ராக்கெட் வாங்குகிறார்கள்


தமிழ்வேள்
ஆக 04, 2024 08:04

இஸ்ரேல் ஷியா கும்பல் மீது தாக்குதல் நடத்தினால் அதனை சன்னி கும்பல் ஆதரித்து அமைதியாக இருக்கும்.. இஸ்லாமிய கொலைவெறி கும்பல்கள் இருக்கும் வரை மத்திய கிழக்கு மட்டும் அல்ல, எந்த உலகநாடும் அமைதியாக இருக்க முடியாது.. யாரும் கிடைக்கவில்லை என்றால் தங்களுக்குள்ளேயே குண்டு வைத்து கொன்று குவித்தது விளையாடும் கும்பல் அது...பாலைவன கொள்ளை அடித்து வாழும் மனநிலை இன்னும் மாறவில்லை அது களுக்கு.. அடித்து கொண்டு சாகட்டும் என்று விட்டு விடுவது நல்லது... இவர்களை சமாளிக்க வேண்டுமானால் இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.. ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் அமைதியை அழித்து பேரழிவுகளை உண்டாகும் கும்பல் இது...இது அழிந்தால் உலகில் அமைதி திரும்பும்..


Sudar
ஆக 04, 2024 07:41

ஏன் இஸ்ரேல் வெறி எப்ப அடங்கும்? மதசகிப்பின்மை எல்லாருக்கும் இருக்கு...


bgm
ஆக 04, 2024 07:58

மூர்கநின் மூர்கம் ஒழியும் வரை...


Kumar Kumzi
ஆக 04, 2024 12:56

இஸ்ரேலை உசுப்பேத்திவிட்டு உதை வாங்குவதே மூர்க்கத்தின் பொழுதுபோக்கு


Natarajan Ramanathan
ஆக 04, 2024 07:19

உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ரத்த வெறிபிடித்த பாலஸ்தீனத்தை முற்றாக அழிக்கும்வரை இந்த போர் ஓயாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை