உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கண்களை பார்த்து பேசுங்கள்: பாக்., பெண் எம்.பி., கண் பார்த்து பேசும் பழக்கம் இல்லை: சபாநாயகர்

கண்களை பார்த்து பேசுங்கள்: பாக்., பெண் எம்.பி., கண் பார்த்து பேசும் பழக்கம் இல்லை: சபாநாயகர்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பார்லிமென்டில், “என் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுங்கள்,” என, பெண் எம்.பி., விடுத்த வேண்டுகோளுக்கு, “பெண்களின் கண்களை பார்த்து பேசும் பழக்கம் இல்லை,” என, சபாநாயகர் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். இவரது அரசு பதவி ஏற்றதும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைத்தது.பாக்., பார்லிமென்ட் கூட்டத்தொடர் நேற்று நடந்து கொண்டிருந்தபோது, இம்ரானின் பாக்., தெஹரீக் - இ - இன்சாப் கட்சியின் பெண் எம்.பி., சர்தாஜ் குல், சபையில் காரசாரமாக பேசினார். முந்தைய இம்ரான் ஆட்சியில் இணை அமைச்சராக பதவி வகித்த இவர், தற்போது எம்.பி.,யாக உள்ளார்.சர்தால் குல் பேசும்போது சபநாயகர் அயாஸ் சாதிக், தன் முன்னால் இருந்த கோப்பை பார்த்தபடி அமர்ந்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த எம்.பி., சர்தாஜ் குல் சபாநாயகரை பார்த்து கூறியதாவது:நான் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் எம்.பி.,யாக உள்ளேன். என்னை நம்பி 1.50 லட்சம் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஆனால், நான் பேசும் போது நீங்கள் என் முகத்தை கூட பார்ப்பதில்லை. எப்போது பேசினாலும் எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி பேசும்படி என் கட்சி தலைவர்கள் எனக்கு கற்றுத் தந்துள்ளனர். நீங்கள் என் கண்களை தவிர்ப்பதால் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. தயவு செய்து கண்ணாடியை அணிந்து கொண்டு என் கண்களை பாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இதை கேட்டு சற்று அதிர்ந்து போன சபாநாயகர், “நீங்கள் பேசுங்கள் நான் கேட்கிறேன். பெண்களின் கண்கள் பார்த்து பேசுவது முறையாகாது. நான் அதை எப்போதும் தவிர்த்துவிடுவேன்,” என்றார். இதை கேட்ட பெண் எம்.பி., உட்பட சபையில் சிரிப்பலை எழுந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:10

திராவிட மாடலுக்கு பாகிஸ்தான் மேல ஒரு அலாதி பிரியம் ..... அதனால அவங்களும் மக்களுக்கு உபயோகமா நம்ம திராவிட மாடல் சட்டசபை மாதிரி விவாதம் நடத்துறாங்க டாஸ்மாக் சரக்குல கிக் இல்ல ன்றது லேட்டஸ்ட் உதாரணம் ...... நமக்கும் சந்தோசமா இருக்குது ......


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:08

விழிப்புணர்வும் தேவை ..... விழி புணர்வும் தேவை ......


Ramarajpd
ஜூலை 02, 2024 19:31

ராகுல் காந்தியைப் போலவே தைரியம் ஆனா பெண். திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்று பாருங்கள். பேசி முடித்து விடலாம்.


Azar Mufeen
ஜூலை 02, 2024 15:34

இல்லாத ஒருவனை விட இருக்கும் மனிதனை நேசிப்போம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:28

நேத்திக்கு மெத்து டோஸ் அதிகமாயிருச்சா ??


ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 10:50

கஷ்டப்பட்டு மேக்கப், லிப்ஸ்டிக்கெல்லாம் போட்டுகிட்டு வரும்போது பாராமுகமாக இருந்தால் எப்படி? எல்லாம் வேஸ்ட்.


M Ramachandran
ஜூலை 02, 2024 10:05

... பெண் போல் தெரிகிறது. இல்லையானால் வெற்றி பெற்று வந்திருக்க முடியாது.


Saai Sundharamurthy AVK
ஜூலை 02, 2024 08:34

ஒழுக்கத்தை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். நல்லொழுக்கம் கொண்ட சபாநாயகர் கூறுவது சரியே!!! இராமாயணத்தில் ராமபிரான் மற்ற பெண்களின் நிழலைக் கண்டால் கூட தள்ளித் தான் நிற்பார். அந்த நிழல் மீது கூட காலை வைக்க மாட்டார்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2024 07:23

நல்லபழக்க வழக்கங்கள் எங்கே இவர்களுக்கு வந்துவிட போகிறது, பஸ்ஸில் போகும் போதும் தாய் தங்கையை விட வரும் என்னை பார்க்கும் பார்வையே சொல்லும் அவர்களின் கேடுகெட்ட தனத்தை, ஆனால் அந்த வியாதிகள் தான் சமூக நீதியை பேசும் அதை கேட்கையில் வேதனையாக இருக்கும்


Svs Yaadum oore
ஜூலை 02, 2024 06:56

இங்குள்ள சினிமா நடிகன் ஒருத்தன் மாணவிகளுக்கு பரிசு கொடுக்கிறேன் என்று சிறுபான்மை பெண் வந்த போது ரெண்டு அடி தள்ளி நின்று பரிசு கொடுத்தான்.. ஆனால் அதே மேடையில் மற்ற மாணவிகள் வந்த போது அவர்கள் தோளில் கையை போட்டபடி போஸ் கொடுத்தான். இதை அங்கிருந்த மானமில்லாத பெற்றோர் கூட்டமும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. கொஞ்சம் கூட வெட்கமில்லாத சினிமா அடிமை கூட்டம் ....


venkatakrishna
ஜூலை 02, 2024 14:38

உண்மையை, மனதில் பட்டதை, பார்த்ததை அப்படியே எழுத்து வடிவமாக எழுதயது நன்றாத உள்ளது. அரசியல் ஆரம்பமே இப்படி என்றால் பின்வரும் நாட்கள் எப்படி?


N Sasikumar Yadhav
ஜூலை 02, 2024 06:53

அவர்கள் கண்ணை பார்த்து பேசுவதாக இருந்தால் வெடிகுண்டு போடும் எண்ணம் வரவே வராது. அவர்கள் எப்போதுமே மறைந்திருந்து தாக்குவார்கள் அல்லது கும்பலாக வந்து தாக்குவார்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி