உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க மாகாணத்தில் சட்டமானது 10 கட்டளைகள்! கிறிஸ்துவ நாடாக மாற்ற முதல் படியா?

அமெரிக்க மாகாணத்தில் சட்டமானது 10 கட்டளைகள்! கிறிஸ்துவ நாடாக மாற்ற முதல் படியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அட்லாண்டா : அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தில், கிறிஸ்துவர்களின் 10 கட்டளைகளை பள்ளிகளில் அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கான முதல் படியா என்ற கேள்வி, சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது. அமெரிக்காவில், 34 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில், 7-0 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக உள்ளனர். இதில் பல பிரிவினரும் அடங்குவர். இதைத் தவிர, 21 சதவீதம் பேர் எந்த மதத்தையும் சாராத நாத்திகவாதிகளாக உள்ளனர்.கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், அமெரிக்கா கிறிஸ்துவர்கள் நாடாக பார்க்கப்படுவதில்லை. இந்நிலையில், இங்குள்ள லுாசியானா மாகாணத்தில், கிறிஸ்துவ மதம் தொடர்பான பல மசோதாக்கள் சமீபகாலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.மூன்றாம் பாலினத்தவர்களை, அவர்கள் பிறப்பு சான்றிதழின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். பொதுப்பள்ளிகளில், சாப்ளின்கள் எனப்படும் மத வகுப்புகள் போதிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஒப்புதல்

இந்நிலையில், கிறிஸ்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய, '10 கமாண்ட்மென்ட்ஸ்' எனப்படும், 10 கட்டளைகளை, அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் இயற்றப்படும் முதல் மாகாணமாக லுாசியானா உள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்காவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கான முதல் படியாக இது பார்க்கப்படுகிறது.இந்த மாகாணத்தில் குடியரசுக் கட்சியினர்தான், 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பான்மையினராக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர். எட்டு ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் ஜான் பெல் எட்வர்ஸ் கவர்னராக இருந்தார். கிறிஸ்துவ மதத்தை முன்னிறுத்தும் மசோதாக்களை, தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அவர் நிராகரித்து வந்தார்.இந்நிலையில் ஜெப் லாண்ட்ரி, கடந்தாண்டு கவர்னராக வந்தார். வழக்கறிஞரான இவர், கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளில் ஆஜரானவர். தீவிர மதப்பற்றாளரான இவர், கவர்னரான பின், அங்கு, கிறிஸ்துவ மதம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, 10 கட்டளைகளை, மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் எழுதி வைப்பதை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.கருக்கலைப்பு செய்யும் மருந்துகளை, அபாயகரமான பொருட்களாக அறிவிக்கும் மசோதாவை அவர் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தினார். இதிலும், நாட்டில் முதல் மாகாணமாக லுாசியானா உள்ளது.''கிறிஸ்துவ பழமைவாதிகள், நீண்ட காலமாக இந்த மாகாணத்தை கிறிஸ்துவ மாகாணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கவர்னராக, ஜெப் லாண்ட்ரி பதவியேற்றதும், அவர்களுடைய முயற்சிகள் தீவிரமாயின,'' என, லுாசியானா மாகாண பல்கலை அரசியல் அறிவியல் பேராசிரியர் ராபர்ட் ஹோகன் கூறியுள்ளார்.கடந்த 40 ஆண்டுகளில் பல மாகாணங்களில், 10 கட்டளைகளை கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால், முதல் முறையாக லுாசியானாவில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

ஓக்லஹோமா, மிசிசிபி, மேற்கு விர்ஜினியா மாகாணங்களிலும், கடந்த ஆண்டு இதுபோன்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன; ஆனால், நிராகரிக்கப்பட்டன.அரிசோனா மாகாணத்தில், 10 கட்டளைகளை பள்ளிகளில் வைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோலவே, ஜார்ஜியாவிலும் மாகாண சட்டசபையில் மசோதா தோல்வி அடைந்தது.லுாசியானாவைத் தொடர்ந்து இதுபோன்ற மசோதாக்களை மற்ற மாகாணங்களிலும் நிறைவேற்ற முயற்சிகள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் பிரதிநிதிகளுக்கான தேசிய சங்கம் இதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளது.அதே நேரத்தில், இதுபோன்ற மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது. நாட்டை, கிறிஸ்துவ நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக, எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.''லுாசியானா அரசியல்வாதிகள், கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியை மட்டும் மேற்கொள்ளவில்லை. மக்கள் பணத்தை வைத்து பள்ளிகளிலும், கிறிஸ்துவத்தை கட்டாயமாக்கப் பார்க்கின்றனர்,'' என, அரசு மற்றும் சர்ச்சுகள் இடையேயான இணைப்பை எதிர்க்கும் அமெரிக்கர்கள் என்ற அமைப்பின் தலைமை நிர்வாகி ராச்சல் லாசர் கூறியுள்ளார்.இதுபோல பல அமைப்புகளும், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mani
ஜூன் 29, 2024 22:56

என்ன உளறுகிறீர்களா இல்லை தெரிந்தே பொய் கறியர் gób சங்கி பிரசாரம் செய்கிறீர்களா? தெற்கே எந்த ஊரிலும் கோயில் சர்ச் செல் வது எந்த காலத்திலு. ம் பிரிட்டிஷ் ஆண்ட காலத்திலும் கட்டாயம் இல்லையே


சித்தறஞ்சன்
ஜூன் 24, 2024 22:40

ஐரோப்பாவில் பல நாடுகளில் முஸ்லிம்களை கூடுதலாக விட்டபடியால் அங்கு பெரிய பிரச்சினை. தலைய மூடிக் கொண்டு பேய் போல் திரிவதால் அதைப் பார்த்துவிட்டு அங்குள்ள நாசி கும்பல்கள் கலவரம் செய்கின்றனர். முஸ்லிம்களை கூடுதலாக விட்ட நாடுகளின் அரசாங்கங்கள் வரப் போகும் இடைத்ததேர்களில் மண்ணைகவ்வஇருக்கின்றன


Ramesh
ஜூன் 24, 2024 07:08

அந்தந்த நாடுகளின் கலாசாரம் எதுவோ அதனை மதிக்கும் பின்பற்றும் மதமே அந்தந்த நாடுகளின் இயல்பான மதமாக இருக்க வேண்டும். அதே சமயம், பிற மதங்களை மதித்து அதனை பின்பற்றுபவர்களுக்கு உரிய மரியாதையையும் தரப்பட வேண்டும். அதனை சாக்காக வைத்து அன்னிய மதத்தினர் நாட்டின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மதத்தை ஆராய முற்ப்பட்டால் விளைவு விபரீதம் தான். உதாரணமாக பார்ஸி மதத்தினரும் யூத மதத்தினரும் பல நூறு ஆண்டுகளாக நம் தேசத்தில் சிறப்பாக தழைத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதே சமயம் முஸ்லீம்களும் கிறுத்துவர்களும் அவர்களுடைய கலாச்சாரத்தை புகுத்த நினைப்பதும் துவேஷத்துடன் இந்திய கலாச்சாரத்தை சிதைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவதும் பிரச்சினைக்கு மூல காரணமாகிறது.


சித்தறஞ்சன்
ஜூன் 24, 2024 22:36

நண்பா. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. மற்ற மதத்தவர்கள் எல்லாம் தாங்கள் போகும் நாடுகளில் அந்த நாடுகளின் மக்களுடன் ஒத்துப் போகிறார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஒரு பத்து அல்லது பதினைந்து வீதம் மக்களே மற்ற மக்களுடன் ஒத்துப் போகிறார்கள். இதுதான் பிரச்சனை. தலைய மூடிக்கொண்டு பேய் போலாதிரிந்தால் யாருக்குத்தான் கோபம் வராது


kulandai kannan
ஜூன் 23, 2024 17:25

11வது கட்டளை, திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க


M Ramachandran
ஜூன் 23, 2024 13:02

கிறிஸ்துவ நாடானா இங்கிலாந்து இப்போ முஸ்லிம்கள் பெருவாரியாகா உள்ள நாடாகா உள்ளது. இது எப்படி என்றால் அஙகுள்ள கிறிஸ்துவர்கள் ஞயுறு அன்று முன்பு பிராயிருக்கு அதாவது சர்வீஸுக்கு நிச்சயம் செல்ல வேண்டும். இந்தியாவிலும் அதுவும் திருநெல்வெலி கன்யாகுமரி மாவட்டத்தில் கட்டாயம் . ஆனால் இங்கிலாந்து சர்ச்சுகள் காட்ரோடிக்கொண்டிருக்கின்றன. இதனால் இளைய தலைமுறைகளாய் வந்தேரி மதத்தினர் வெகு சுலபமாக முஸ்லீம் களாகா மாற்றி கொண்டிருக்கின்றனர்.


Tamil
ஜூன் 23, 2024 12:54

அமெரிக்கா ஏற்கனவே கிறிஸ்தவ நாடுதானே. அதை எதற்கு கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? புலம்பெயர்ந்தவர்களால் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியே இது...


RajK
ஜூன் 23, 2024 12:33

லூசியா மாகாணத்திற்கு பின்பு உலகத்தில் இந்த சட்டத்தை அடுத்தது நிறைவேற்றப் போவது திராவிட மாடல்தான்.


சண்முகம்
ஜூன் 23, 2024 10:57

10 கட்டளைகள் சரியான மொழியாக்கம்: 1. வேற்று கடவுளை என் முன் காட்டாதே. 2. விக்கிரகங்களை தொழாதே. 3. காரணமின்றி கடவுளை அழையாதே. 4. கடவுளை நினையும் நேரத்தில் தூயவனாய் இரு. 5. தந்தை தாயை மதித்து நடக்க. 6. கொலை செய்யாதே. 7. மனைவி/கணவரின்றி வேறொருவருடன் உடலுறவு கொள்ளாதே. 8. திருடாதே. 9. பொய் சாட்சி செல்லாதே. 10. பிறன் மனைவியை இச்சிக்காதே. இதை பள்ளிகளில் வைக்க வேண்டும் என கூறும் ட்ரம்ப் 4, 7, 8, 10 ஆகிய கட்டளைகளை சட்டவிரோதமாய் மீறியதற்காக தணடனை பெற இருக்கிறார்.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 09:27

மற்ற மதக் கடவுளை மதிக்காதே என்பது தாலிபான் வழி. அமெரிக்கா வின் அழிவு தொடங்குகிறது.


சித்தறஞ்சன்
ஜூன் 24, 2024 22:37

முஸ்லிம்களை அதிகமாக விட்டால் நாட்டை நாசமாக்கி விடுவார்கள்


mei
ஜூன் 23, 2024 07:42

மிகவும் நல்லது, இல்லையென்றால் அமெரிக்காவையும் முஸ்லீம் நாடாக மாற்றி விடுவார்கள். இந்தியா கவனம்


K.Muthuraj
ஜூன் 23, 2024 08:42

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, யூதர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவு இது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை