உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துபாயில் உருவாகிறது உலகிலேயே மிக பெரிய புதிய விமான நிலையம்

துபாயில் உருவாகிறது உலகிலேயே மிக பெரிய புதிய விமான நிலையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: துபாயில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அமைய உள்ளது.இது குறித்து துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்து இருப்பதாவது: தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட புதிதாக உலகின் மிக பெரிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இது கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும். இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகளும் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 260 மில்லியன் பயணிகளுடன் உலகின் மிகப்பெரிய திறன் கொண்டதாக இருக்கும். துபாய் விமான போக்குவரத்து துறை முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது. மேலும் விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படும் எனவும்,புதிய விமான நிலையம் அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஏப் 29, 2024 05:34

குறைந்த வாடகை என்றால் பல நாட்டு விமான நிறுவனங்களும் அங்கு சென்று அதன் பின் வேறு நாடுகளுக்கு போக வாய்ப்புண்டு மும்பையை விரிவு படுத்தி வாடகையை குறைத்தால் அந்த வாய்ப்புக்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்புண்டு சுற்றுலாவை விரிவு படுத்த இந்தியாவுக்கு நல்லதொரு வாய்ப்பு


Rpalnivelu
ஏப் 28, 2024 21:41

உலகில் எல்லா விமான நிலையங்களும் விரிவு படுத்தப்படுகின்றன ஆனால் சென்னை பரந்தூர் விமான நிலையம் இன்னும் கொர்ர் கொர்ர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை