உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 98 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர்.மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகாவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N.Purushothaman
டிச 29, 2025 09:39

ஆழ்ந்த இரங்கல்கள் ..இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மற்றும் காயமுற்றோர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனைகள்....


raja
டிச 29, 2025 09:09

Rip


மேலும் செய்திகள்