மேலும் செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு என்ன? நட்பு நாடுகளை உஷார்படுத்தும் நேட்டோ
3 hour(s) ago | 10
பாக்., மாஜி உளவுத்துறை தலைவருக்கு 14 ஆண்டு சிறை
7 hour(s) ago
பல்கேரியாவில் மீண்டும் வெடித்தது மக்கள் போராட்டம்
7 hour(s) ago | 1
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த 30 குழந்தைகளை, ஆப்கானிஸ்தானின் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.பாகிஸ்தானின் பஜாவுர் பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த 30 குழந்தைகள், நேற்று ஈத் பண்டிகையைக் கொண்டாடிய போது, தவறுதலாக எல்லையைத் தாண்டி, ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்திற்குள் சென்று விட்டனர்.அப்போது, ஐந்து வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள், அவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்திய பயங்கரவாதிகள், தாரிக் இ தலிபான் அமைப்பினராக இருக்கலாம் என, பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.அவர்களை விடுவிப்பதற்காக, பழங்குடியினத் தலைவர்கள், ஆப்கனுக்குச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டுத் தரும்படி, பாக்., அரசு மற்றும் பழங்குடியினத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hour(s) ago | 10
7 hour(s) ago
7 hour(s) ago | 1