உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "மீண்டும் மோடியே பிரதமர்"; இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு

"மீண்டும் மோடியே பிரதமர்"; இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: '2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார் மோடி' என இங்கிலாந்தின் பிரபல கார்டியன் பத்திரிகை கணித்துள்ளது.இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வரவிருக்கும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் அக்கட்சியின் சமீபத்திய வெற்றிகளும், பிரதமர் மோடியின் அபரிமிதமான புகழும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதும் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்கும்.3 மாநிலங்களில் பா.ஜ., பெற்ற வெற்றிகள், பிரதமர் மோடியின் புகழை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அதேபோல் பிரதமர் மோடியே 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவார் . இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலவரப்படி மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடை க்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 2014ல் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து நாட்டின் வளர்ச்சி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உட்கட்சி பூசல்

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிறைந்து காணப்படுகிறது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இன்னும் உட்கட்சி பிரச்னைகள் நிலவுகிறது. இருப்பினும் பா.ஜ., கூட்டாக எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ளது.அடுத்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற பெயரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது .

மோடியின் பங்கு

முக்கியமான மாநிலங்களான பீஹார் மற்றும் மஹாராஷ்டிராவில் கட்சியின் நிலைப்பாடு சரியில்லாத காரணத்தாலும், ஓட்டுக்கள் அதிக அளவு கிடைக்க வாய்ப்பில்லை. சட்டசபை தேர்தலுக்கும் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பா.ஜ., தனது பிரசாரத்தில் மோடியை முன்னிறுத்துகிறது. வாக்காளர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்க பல பேரணிகளில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.இந்தியாவை உலக வல்லரசாக உயர்த்துவதில் பிரதமர் மோடியின் பங்கு அதிகம் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சந்திரனில் சந்திரயான்-3 கால் பதித்து சாதனை படைத்தது பாராட்டுக்குரியது. லோக்சபா தேர்தலுக்கான வாய்ப்புகள் குறித்து பா.ஜ., மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

M Ramachandran
ஜன 05, 2024 10:25

ஊபீசுகளுக்கு வயிற்று போக்கு அதிகமாக செய்யும் செய்தி


venugopal s
ஜன 02, 2024 06:51

சுயபுத்தியும் இல்லை சொல்புத்தியும் இல்லை என்றால் என்ன செய்ய முடியும்? எக்கேடோ கெட்டுப் போங்கள் என்று விட்டு விட வேண்டியது தான்!


Ramesh Sargam
ஜன 02, 2024 00:51

அவர்களுக்கு நன்றாக தெரிகிறது, நன்றாக புரிகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு சில அயோக்கிய பத்திரிகைகளுக்கு மோடியை பற்றி தெரியாமல் போனதுதான் வேதனை அளிக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகைகள் தமிழகத்தில் உள்ளன. அவைகள் அனைத்தும் திமுகவின் - நக்கிகள்.


Bhakt
ஜன 01, 2024 22:46

வாய்மையே (பிஜேபியே) வெல்லும்


Thiruvenkadam
ஜன 01, 2024 22:17

வெகு விரைவில் நாடு ஸ்ரீலங்கா போல ஆகப்போகுது....அப்போதுதான் வடக்கத்தியன் திருந்தி பீசப்பிக்கு ஓட்டு போட மாட்டான்....


ArGu
ஜன 03, 2024 15:54

கரெக்ட் தான்... உண்டி குலுக்கி இல்லனா... டெங்குவுக்கு போடலாம்


katharika viyabari
ஜன 05, 2024 13:09

திருவேங்கடத்திலிருக்கும் திருவேங்கநாதரை வழிபடுங்கள் உங்கள் வெறுப்பு குணம் மாறும்.


Easwar Kamal
ஜன 01, 2024 21:33

idhu ooru arinja visayam. idhai solradhuku edhuku thevai illama inglandhai kondu varanum. edhuku veen selavu....


Chidambaram
ஜன 01, 2024 20:37

Bharat matha ki ji.conformed Modi ji government


தமிழ்வேள்
ஜன 01, 2024 20:03

ரோமஜாமி கும்பலுக்கு எங்கோ மிளகாய் வைத்தது போல சும்மா குளு குளு என்று இருக்குமே?


g.s,rajan
ஜன 01, 2024 19:49

உபயம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் .....


g.s,rajan
ஜன 01, 2024 19:22

உலக அளவில் அடக்குமுறை .....


மேலும் செய்திகள்







புதிய வீடியோ