உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

லண்டனில் பா.ஜ., ஆதரவாளர்கள் பேரணி: மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் சூழலில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர்.'ரன் பார் மோடி' என்ற பெயரில் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். அவர்கள் இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு வீதிகளில் உலா வந்தனர். அங்குள்ள புகழ்பெற்ற டவர் பிரிட்ஜ் அருகே பேரணி முடிவுக்கு வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

FINE FINISH CREATIVE CENTRE “WALL MURAL BASRELIEF” DINDIGUL 624 OO3
மே 02, 2024 18:26

நாட்டை விற்பனை செய்யும் கலக்காரர்கள் நமக்கு தேவை இல்லை வாளர்சிப்பாதையில் இட்டுச்செல்லும் மோதி அவர்களே நமது கடவுள்


MADHAVAN
ஏப் 30, 2024 16:45

தமிழ்நாட்டுல இருக்குற கூட்டத்தைவிட இங்கு நிறைய கூட்டம் இருக்கு


J.Isaac
ஏப் 29, 2024 19:52

கொழுப்பு


J.V. Iyer
ஏப் 29, 2024 17:48

நல்லவர்கள் நல்ல ஆட்சியை ஆதரிப்பதால் வியப்பில்லை


அப்புசாமி
ஏப் 29, 2024 17:03

ஆகவே லண்டன் வாக்காளர்கள் தங்கள்.பொன்னான வாக்குகளை போடவும்.


J.Isaac
ஏப் 29, 2024 16:30

தென் இந்தியாவிலும் இவர்களுடைய சேட்டை அதிகமாகிவிட்டது


Vathsan
ஏப் 29, 2024 13:09

பஞ்சம் பிழைக்க போன இடத்துல அந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாம இவனுங்கள அந்தந்த நாடுகள் லாடம் கட்டி அனுப்பினால் வாயை மூடிட்டு சும்மா இருப்பாங்க


tamilan
ஏப் 29, 2024 12:47

அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இதன் காரணமாக காங்கிரஸ் மீது நம்பிக்கை பிறந்துள்ளது


Venkat, UAE
ஏப் 29, 2024 11:57

இந்த கருத்தை ராகுல் காந்தியிடம் கூறுங்கள்


ஆரூர் ரங்
ஏப் 29, 2024 11:33

வெளிநாட்டில் இது போன்ற ஊர்வலங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. நமது அரசியல் நம் எல்லைக்குள் மட்டுமே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை