உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கட்டுமானத்தின் போது மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

கட்டுமானத்தின் போது மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் :அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.சர்வதேச வர்த்தகத்துக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் தென் சீனக் கடல் பகுதி முழுதையும், சீனா உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. எதிரிகளை சமாளிக்கும் விதமாக, சீனா தன் கடற்படையை அசுரவேகத்தில் கட்டமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வூஹான் நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை அந்நாடு வடிவமைத்து வந்தது.இந்த கப்பல், கட்டுமானத்தின்போதே நீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை 15ம் தேதி எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தில், சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. நீரில் மூழ்கிய அந்த கப்பல், கிரேன் உதவியுடன் துாக்கி நிறுத்தப்படுவது அந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. கப்பல் நீரில் மூழ்கிய சமயத்தில் அணுசக்தி எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததா என்ற விபரம் தெரியவில்லை. கடந்த 25ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அந்த இடத்தில் வேறொரு நீர்மூழ்கி கப்பல் உள்ளது. அவையிரண்டும் ஒன்றா என்பது தெளிவாக தெரியவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 28, 2024 07:18

சீனா எதைப்பற்றியும் கவலைப்படாது. உலகமே அவர்களுக்கு சொந்தமாகும் வரை ஓயமாட்டார்கள். உள்ளுக்குள் இருக்கும் சீனர்களும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகமும் பிரச்சினை செய்தால் தவிர ஒன்றும் நடக்காது. அவர்களை பொறுத்தவரை அமெரிக்காவை முதலீட்டை வைத்து ஒழித்துக்கட்டி விடலாம், ஜப்பானை அவர்கள் வழியிலேயே சென்று தொழில் கற்று வீழ்த்தி விடலாம், இந்தியர்களை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை வைத்து வீழ்த்தி விடலாம், தென் சீனக்கடல் நாடுகளை அவர்களில் ஏழ்மையை வைத்து வீழ்த்திவிடலாம் போன்ற கனவில் இருக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி