உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாகா: வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று, வங்கதேசம் தனி நாடானது. போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கடந்த 2018ல் நடந்த மாணவர் போராட்டத்தை தொடர்ந்து இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம் கீழமை நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இதில், ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 133 பேர் உயிரிழந்தனர்.இந்த இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் உத்தரவு செல்லாது எனக்கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Krishna Moorthy
ஜூலை 22, 2024 11:13

பொதுவாக இஸ்லாமியர் உலகில் எந்தவொரு தேசத்திற்கும் விசுவாசம் ஆக இருக்க மாட்டார்கள்


PARTHASARATHI J S
ஜூலை 21, 2024 22:57

அரசாங்கங்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்களை நீதிமன்றங்கள் ரத்து செய்கின்றன. எல்லா நாட்டிலும் இதே கதைதான்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 17:42

இடவொதுக்கீட்டுக்கு அனுமதி உண்டா ?


Barakat Ali
ஜூலை 21, 2024 17:39

இந்தியாவிலும் இடவொதுக்கீடு தேவை .....


Kumar Kumzi
ஜூலை 21, 2024 18:43

பங்களாதேஸ்க்கு போயி கேளு பாய்


KarthiJV
ஜூலை 21, 2024 17:02

ஆமாம். No reservation is the best policy. Let us see how long.. people can be fooled.


kulandai kannan
ஜூலை 21, 2024 17:00

வங்க தேசம் இன்று, இந்தியாவில் என்று?


sridhar
ஜூலை 21, 2024 15:36

இங்கே ஒதுக்கீடை குறைக்கவாவது செய்யுங்கள், புண்ணியமா போகுது. நம் திறமை எல்லாம் அமெரிக்கா போகுது .


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி